சஞ்சீவி மலை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
சஞ்சீவி மலையை பெயர்த்துத் தூக்கிவரும் அனுமன்
சஞ்சீவி மலையை தூக்கிக்கொண்டு நின்ற கோலத்தில் அனுமன்

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

சஞ்சீவி மலை, பெயர்ச்சொல்

பொருள்[தொகு]

  1. அனுமன் தூக்கிவந்த இமயத்து மகேந்திரகிரியிலிருந்து பெயர்த்த மூலிகை மலை.

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. a hillock with precious herbs in himalayan range of mountains that lord hanuman carried to lanka to save seriously wounded lakshmana and other wounded soldiers during the war between lord ram and lanka's king ravana

விளக்கம்[தொகு]

  • இராமனுக்கும் இராவணனுக்கும் நடந்த போரில் அடிப்பட்டு மூர்ச்சையான இலக்குவன் மற்றும் வானர வீரர்களைக் காப்பாற்ற அனுமன் இமயத்திலிருந்து பெயர்த்துத் தூக்கிவந்த அரிய மூலிகைகளைக்கொண்ட சிறிய மலை... அனுமனால் மூலிகைகள் நிறைந்த மலையைக் கண்டுபிடிக்க முடிந்தாலும் தேவைப்பட்ட மூலிகையை இனம் கண்டுக்கொள்ள முடியாததால் அந்த மலையையே பெயர்த்து இலங்கைக்கு எடுத்துச் சென்றார்... அடிப்பட்ட, மூர்ச்சையான எல்லாரும் குணமானபிறகு மீண்டும் அந்த மலையை பெயர்த்த இடத்திலேயே கொண்டுவைத்துவிட்டார்... அந்த மூலிகைக்கு சஞ்சீவி அல்லது சஞ்சீவினி எனப் பெயராகும்... அம்மூலிகை இருந்த மலையே சஞ்சீவி மலை அல்லது சஞ்சீவி பர்வதம்... அனுமன் இப்படி செய்தபோது வழியில் ஆங்காங்கே அவர் தூக்கிவந்த மலையின் சிறுப் பகுதிகள் விழுந்ததாக நம்பப்படுகிறது...அப்படி வீழ்ந்த ஒரு பகுதியே குமரி மாவட்டத்தில் நாகர் கோயிலுக்கு சற்று தொலைவிலுள்ள 'மருத்துவ மலையாகும்'
"https://ta.wiktionary.org/w/index.php?title=சஞ்சீவி_மலை&oldid=1221523" இலிருந்து மீள்விக்கப்பட்டது