சமஸ்தானம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
சமஸ்தானம்--ஐதராபாத்
சமஸ்தானம்--கொச்சி
சமஸ்தானம்--பச்சை நிறம்--மைசூர்., ஊதா நிறம்--திருவாங்கூர்,கொச்சி.,தலைப்பக்கம் நடுவில்--ஐதராபாத்

தமிழ்[தொகு]

சமஸ்தானம், பெயர்ச்சொல்.

பொருள்[தொகு]

  1. அரசர்களின் ஆளுகைக்குட்பட்ட இராச்சியம்..
  2. மன்னர் ஆளும் நாடு
  3. முடியாட்சி நாடு
  4. அரசு, ஆளுகை

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. princy state
  2. kingdom
  3. dominion

விளக்கம்[தொகு]

  • புறமொழிச்சொல்...வடமொழி....संस्थान....ஸம்ஸ்தா2- ந...சமஸ்தானம்..பொதுவாக அரசாங்கம்/நிர்வாகம்/மக்கள் செறிந்து வாழ்விடம் என்ற பல அர்த்தங்களைக் கொண்டது...இந்தியாவை ஆங்கிலேயர்கள் ஆண்டகாலத்தில், மன்னர்கள் ஆளுகைக்குட்பட்ட இராச்சியங்களை ' சமஸ்தானம்' என்று அழைத்தனர்...இந்த மன்னர்கள் தங்கள் பிராந்தியத்தை சுயஆட்சி செய்துக்கொள்ள அனுமதித்த ஆங்கிலேய பேரரசுக்கு அடங்கியே அவர்கள் சொன்னபடியெல்லாம் கேட்டு நடந்துகொள்ளவேண்டும் என்ற நிலை இருந்தது...

பயன்பாடு[தொகு]

  • இந்தியா சுதந்திரம் பெற்ற போது, 565 சமஸ்தானங்கள் நாட்டிலிருந்தன...இவற்றை விடுதலை பெற்ற பிரிட்டிஷ் இந்தியப் பகுதிகளோடு, பேச்சுவார்த்தைகள் மூலமும், இராணுவ நடவடிக்கை மூலமும் ஒருங்கிணைத்து, தற்போதுள்ள இந்தியாவை சர்தார் வல்லப பாய் படேல் உருவாக்கினார்...அவற்றில் காஷ்மீர்,ஐதராபாத்,மைசூர்,திருவாங்கூர், பிகானிர், பாட்டியாலா, குவாலியர், பரோடா, ஜுனாகத், ஜோத்பூர், ஜெய்சல்மர் ஆகியவை முக்கியமானவை...தமிழகத்தில் இருந்த புதுக்கோட்டை சமஸ்தானமும் இந்தியாவில் இணைந்தது.


( மொழிகள் )

சான்றுகள் ---சமஸ்தானம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=சமஸ்தானம்&oldid=1885733" இருந்து மீள்விக்கப்பட்டது