சிறிய திருவடி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
சிறிய திருவடி
சிறிய திருவடி

தமிழ்[தொகு]

ஒலிப்பு
(கோப்பு)

சிறிய திருவடி, பெயர்ச்சொல்.

பொருள்[தொகு]

  1. திருமாலின் இராமாவதாரத்தில் அவரின் தொண்டரான அனுமன்.

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. the most obedient servant of sri rama, an incarnation of god mahavishnu... hanuman.

விளக்கம்[தொகு]

  • சிறிய + திரு + அடி = சிறிய திருவடி...இறைவன் திருமாலின் இராமாவதாரத்தில், இராமனின் அடியாரான அனுமனுக்கு ஸ்ரீ வைஷ்ணவ சம்பிரதாயத்தில் வழங்கும் சிறப்புப் பெயர்...இராமனிடத்தில் அளவற்ற பக்தி கொண்டவராய், தேவைப்படும் போதெல்லாம் அவரைச் சுமந்தும், இணை பிரியாமல் எப்போதும் அவருக்குத் தொண்டு செய்ததால் திருமாலின் அடி(யார்) என்று புகழப்பட்டு, இராமனுக்குத் தொண்டு செய்து அவரை சுமக்கும் பாக்கியத்தையும் பெற்றதால் 'திரு' என்ற சிறப்புச் சொல்லையும் சேர்த்து திருவடி (திரு + அடி) எனப்பட்டார்.. கருடன் எப்போதும் திருமாலுக்கு வாகனமாயிருப்பதால் அவர் பெரிய திருவடியென்றும், அனுமன் சிறிய திருவடி என்றும் போற்றப்படுகின்றனர்.
"https://ta.wiktionary.org/w/index.php?title=சிறிய_திருவடி&oldid=1988875" இலிருந்து மீள்விக்கப்பட்டது