சிறைக்காவலர்
தமிழ்
[தொகு]இல்லை | |
(கோப்பு) |
சிறைக்காவலர், .
பொருள்
[தொகு]- சிறைக் காவல் ஊழியர்
மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்
- jail warden
விளக்கம்
[தொகு]சிறைக்காவலர்கள் சிறையின் உள்ளேயும், வெளியேயும் காவல் மற்றும் கைதிகள் சம்பந்தப்பட்ட வேலைகளில் ஈடுபடுவோராகும்... நூற்றுக்கணக்காக இருக்கும் கைதிகள், ஒருவரோடொருவர் சண்டையிட்டுக்கொள்ளாமல் கவனித்துக்கொள்ளுவது, சிறை சட்டதிட்டங்களை கைதிகள் மீறாமல் பார்த்துக்கொள்ளுவது, தினமும் காலையும், மாலையும் கைதிகளை ஓரிடத்தில் சேரச்செய்து ஆவணப்படி அவர்களின் எண்ணிகையைச் சரிபார்ப்பது, உடற்பயிற்சி அளிப்பது, அவர்களை அவரவர்களுக்குத் தெரிந்த வேலைகளின் அடிப்படையில் குழுக்களாகப் பிரித்து வேலை வாங்குவது, எந்த வேலையும் தெரியாதோருக்கு தகுந்த வேலை ஏற்படுத்திக்கொடுப்பது, அவர்களுக்கான உணவு, உடை சம்பந்தமான விடயங்கள் மற்றும் சிறைச்சாலையின் சுத்தம், சுகாதாரம் ஆகியவற்றைக் கவனித்துக்கொள்ளுவது போன்ற அநேக வேலைகள் சிறைக்காவலர்களுடையவை...மேலும் சிறை அதிகாரிகள் தரும் அறிவுரைகள், கட்டளைகளுக்கேற்ப கடமையாற்றுவர்...இவர்களில் கல்வித்தகுதியுடையோர் கைதிகளின் சிறையிலடைப்பு, விடுதலை, அவர்களின் கோரும் சட்டரீதியான நடவடிக்கைகள் ஆகியனவற்றுக்கான ஆவணங்களையும் நாள்தோறும் மீளாய்வு செய்து, நாட்படுத்தி உயர் அதிகாரிகளின் பார்வைக்கு வைப்பர்...மொத்தத்தில் சிறையின் நிர்வாகம் சம்பந்தப்பட்ட களப்பணி முழுவதும் இவர்களின் கைகளில்தான்...