சிற்றானை
Appearance
தமிழ்
[தொகு]
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
- Elephas maximus borneensis(விலங்கியல் பெயர்)
சிற்றானை, .
பொருள்
[தொகு]- ஒரு குள்ளமான யானையினம்.
- ஓர் ஏளனச்சொல் பேச்சு வழக்கு
மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்
- pygmy elephant
- a derisive word colloquial
விளக்கம்
[தொகு]- யானை இனங்களில் குள்ளமான இனம் சிற்றானை அல்லது குள்ளயானை...அழிந்து வரும் விலங்கினங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது...முழு வளர்ச்சியடைந்த யானையே சுமார் எட்டுஅடி உயரம்தான் இருக்கும்...ஆஃப்ரிக்கா கண்டத்திலும், ஆசியாவில் மலேசியக் காடுகளிலும் சிற்றானைகள் வாழ்கின்றன...ஆஃப்ரிக்க சிற்றானைகள் தற்போது ஆஃப்ரிக்க காட்டு யானைகளின் ஒரு வகையாகக் கருதப்படுகிறது...ஆனால் ஆசியாவில் வாழும் சிற்றானைகள் எலெஃபாஸ் மேக்சிமஸ் போர்னீன்ஸிஸ் என்னும் ஒரு தனியினமாக அறியப்பட்டிருக்கிறது...மற்ற யானையினங்களைப் போலவே இலை, தழை, செடி, கொடி, புல்பூண்டுகளை உண்டு வாழும்...நதிகள் போன்ற நீர்நிலைகளில் குளிக்கப் பெரிதும் விரும்பும்...இந்தியாவிலும் மேற்குத் தொடர்ச்சிமலையின் கேரளப்பகுதியில் கல்லானை அல்லது தும்பியானை என்னும் ஒருவகைக் குள்ளயானைகள் வசிப்பதாகக் கூறப்படுகிறது..
- பேச்சு வழக்கில் யாராவது உடல் மிகப்பருத்து குண்டாகயிருந்தால் சிற்றானைக் குட்டி போல் இருக்கிறார் எனப் பரிகாசம் செய்வது இன்றளவும் வழக்கத்திலிருக்கிறது...