சில்லு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

சில்லு பெயர்ச்சொல்

ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
 1. (கண்ணாடி, பீங்கான் முதலியவற்றின்) உடைந்த துண்டு
 2. (கருப்பட்டி, தேங்காய் முதலியவற்றின்) சிறு துண்டு; கீற்று
 3. (முழங்கால் மூட்டின் உள்ளிருக்கும்) வட்ட வடிவமான எலும்பு
 4. நொண்டி விளையாட்டு; பாண்டி விளையாட்டு
 5. சிறு மின்னணுப் பொறி
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

 1. broken piece of (glass, etc.)
 2. slice (of coconut, etc.)
 3. knee-cap
 4. A game of hopscotch played with potsherd
 5. (electronic) chip
விளக்கம்
 1. கண்ணாடிச் சில்லுகளைப் பொறுக்கும் போது கையில் குத்தி இரத்தம் வழிந்தது
 2. கருப்பட்டியில் ஒரு சில்லும் தேங்காயில் ஒரு சில்லும் சேர்த்து உண்டால் சுவையாயிருக்கும்
 3. கால்பந்து ஆட்டத்தின்போது வலது கால் மூட்டின் சில்லு சிறிது நகர்ந்துவிட்டது
 4. ஓட்டுச் சில்லைப் போட்டு நொண்டி விளையாட்டு ஆடினோம்
 5. கணிப்பொறியில் பல சில்லுகள் உள்ளன
( மொழிகள் )

சான்றுகள் ---சில்லு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=சில்லு&oldid=1634423" இருந்து மீள்விக்கப்பட்டது