சிவம்பு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
சிவம்பு செய்யும் ஒரு பெண்

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

சிவம்பு, பெயர்ச்சொல்.

பொருள்[தொகு]

  1. தன் சிறுநீரை தானே குடிக்கும் மருத்துவம்.

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. drinking one's own urine

விளக்கம்[தொகு]

  • நல்ல ஆரோக்கியத்தைப் பெற ஒருவர் தன் சிறுநீரையே அதிகாலை குடிக்கும் ஒரு முறை நீண்ட காலமாக இருந்துவருகிறது...இது ஒரு மருத்துவ முறையாகவே கருதப்பட்டு வருகிறது...இந்த செய்கைக்கு 'சிவம்பு' என்று பெயர்... இறைவன் பரமசிவன் இந்த முறையை பலரும் அறியும்படி தெரிவித்ததால்தான் இந்த மருத்துவத்திற்கு சிவம்பு எனப்பெயர் வந்ததாகச்சொல்வர்...தமிழக சித்தர்களும் இந்த முறையை பரிந்துரைத்ததாகச் சொல்லுகிறார்கள்...முன்னாள் பாரத பிரதமர் மொரார்ஜி தேசாயும் மற்றொரு வட இந்திய அரசியல் தலைவர் ராஜ் நாராயண் என்பவரும் வெளிப்படையாகவே தாம் சிவம்பு முறையை கடைபிடித்ததாக அவர்கள் வாழ்ந்த காலத்தில் சொன்னார்கள்.
"https://ta.wiktionary.org/w/index.php?title=சிவம்பு&oldid=1222264" இலிருந்து மீள்விக்கப்பட்டது