சுணக்கு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

சுணக்கு

சொல் பொருள் விளக்கம்

ஒரு நிலத்தின் முடங்கிய பகுதியைச் சுணக்கு என்பது நெல்லை வழக்கு. அதனை நீர்ச் சுழல் என்னும் பொருளில் வழங்குவது மதுரை வழக்கு. சொணக்கு என்றும், சோணை என்றும் வழங்குவது முகவை வழக்கு. முடங்கி ஒட்டியுள்ள காதைச் சோணை என்பதும், அக் காதுடையவரைச் சோணைக் காதினர் என்று பட்டப் பெயரிட்டு வழங்குவதும் முகவை வழக்கு. ஆதலால் வளைதல் ஒடுங்குதல் பொருளில் சுணக்கு என்பது பொது வழக்காகத் தென்னகத்தில் இடங்கொண்டுள்ளது எனலாம்.

"https://ta.wiktionary.org/w/index.php?title=சுணக்கு&oldid=1912958" இலிருந்து மீள்விக்கப்பட்டது