சுரூபங்கெட்டவன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
சுரூபங்கெட்டவன்--பார்வையற்ற ஒரு பெரியவர்

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

சுரூபங்கெட்டவன், பெயர்ச்சொல்.

பொருள்[தொகு]

  1. அங்கவீனன்
  2. சாதி,ஆசாரம் கெட்டவன்
  3. அழகு குன்றியவன்

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. deformed person
  2. unorthodox person
  3. unsightly

விளக்கம்[தொகு]

  • 'சுரூபங்கெட்டவன்' என்னும் சொல் பாதி வடமொழியும் பாதி தமிழும் கலந்தச் சொல்லாகும்..सुरूप -ஸுரூப1--'சுரூபம்' என்றால் நல்ல உருவம் அதாவது அழகு படைத்த உருவம் என்றுப் பொருள்...தமிழ் 'கெட்டவன்' என்னும் சொல்லோடு சேர்ந்து சுரூபங்கெட்டவன் ஆனது...உடலுறுப்புகளில் ஏதாவது இல்லாதவன்,உடற்குறை உள்ளவன், பார்க்க சகிக்காதவன், நல்ல பழக்க வழக்கங்கள் இல்லாதவன் மற்றும் தன் சாதியின் கட்டுப்பாடுகளுக்கு உட்படாதவன் ஆகிய இவர்கள் 'சுரூபங்கெட்டவன்' எனப்படுகிறார்கள்...நல்ல பழக்க வழக்கங்கள்,கட்டுப்பாடுகளுக்கு உட்படுதல் ஆகியனவும் ஒருவனுக்கு அழகாகவே கருதப்படுகிறது...


( மொழிகள் )

சான்றுகள் ---சுரூபங்கெட்டவன்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=சுரூபங்கெட்டவன்&oldid=1224174" இலிருந்து மீள்விக்கப்பட்டது