சுழல் நாற்காலி
Appearance
தமிழ்
[தொகு]
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
சுழல் நாற்காலி, .
பொருள்
[தொகு]- சுழல்கதிரை
- சுழலிருக்கை
மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்
- revolving chair
விளக்கம்
[தொகு]- சுழல் நாற்காலி அல்லது சுழல்கதிரை என்பது சக்கரம் அல்லது சக்கரமில்லாத வட்டமான ஓர் அடிப்பகுதி அதன் மேல் நடுவில் தூண் போன்ற அமைப்புடன் சுற்றக்கூடிய இருக்கை மற்றும் சாய்ந்துக்கொள்ள வசதியோடு அமைக்கப்பட்ட ஒரு சாதனம்...சக்கரமிருந்தால் அமர்ந்தபிறகு மீண்டும் எழுந்திருக்காமலேயே விருப்பப்பட்ட இடத்திற்கு உந்திக்கொண்டுச் செல்லலாம்...உயரத்தை கூட்டவும், குறைக்கவும்கூட உபகரணம் பொருத்தப்பட்டிருக்கும்...கைகளை நீட்டி வைத்துகொள்ள ஏதுவாக அல்லது அப்படியில்லாமல் வெறும் இருக்கையுடனோ இருக்கும்...நவீன அலுவலகங்களில் தற்போது பெரிதும் பயன்படுத்தப்படும் இருக்கைகள் இதுவேயாகும்.
- அமரும் இருக்கைகள் நான்கு கால்களுடன் தயாரிக்கப்படுவதால் பொதுவாக நாற்காலி என்று அழைக்கப்படுகின்றன...காலத்தோடு இந்த நாற்காலிகள் வடிவமைப்பில் மாற்றம் கண்டாலும்,அந்த மாற்றத்தின் தன்மையையும் நாற்காலி என்னும் சொல்லோடுச் சேர்த்து குறிப்பிடுவது வழக்கமாயிற்று...அந்தவகையில் சுழலும் தன்மை கொண்ட இருக்கை 'சுழல் நாற்காலி' ஆயிற்று...