சூரியதேவன்
Appearance
தமிழ்
[தொகு]
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
சூரியதேவன், .
பொருள்
[தொகு]- இறைவனாக சூரியன்
மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்
- sun as god
விளக்கம்
[தொகு]- தம் சக்திக்கு மேலான, தம்மால் கட்டுப்படுத்தமுடியாத இயற்கையின் அம்சங்களை இந்துக்கள் தெய்வங்களாகவே கொண்டாடினர்...அந்தவகையில் கண் கண்டதெய்வமான சூரியனும் ஒரு தேவன்...நவ கிரகங்களில் ஒருவர்...சூரியனையே பிரதான கடவுளாகப் போற்றும் இந்துமதக் கிளை, சௌரம், இந்துக்களின் ஆறு உபசமயங்களில் ஒன்று...வெற்றி, ஆரோக்கியம், வீரம், தேஜசு ஆகியவற்றை அருளும் தெய்வம்...சூரியனைத் துதிபாடும் ஆதித்ய ஹ்ருதய ஸ்தோத்ரம் மிகப்புகழ் பெற்றது...அகத்திய முனிவரால் இராமனுக்கு உபதேசிக்கப்பட்ட இந்த துதியினாலேயே இராமன் இராவணனை வெற்றிக்கொண்டதாகச் சொல்வர்...தமிழர்களின் பொங்கல் பண்டிகை சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் ஒரு விழாவாகும்...பூவுலகில் தாவரங்கள் உட்பட சகல உயிரினங்களுக்கும் வெய்யில், மழை பெய்தல் போன்றவை வாழ்வாதாரமானவை...இவற்றிற்கு சூரியனே நாயகன்...வெய்யிலின் உதவியால்தான் தாவரங்கள் தம் உணவைத் தயாரித்து, வளர்ந்து மனிதர்களுக்கும் உணவாகின்றன...அதனால்தான் சூரியனையே திருமாலின் ஒரு அம்சமாகக் கருதி சூர்யநாராயணர் என்று போற்றுவர்...நாட்டில் பல இடங்களில் சூரியனுக்குத் தனியே கோவில்கள் உள்ளன...இவர் ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் கிழக்கேயிருந்து தினமும் மேற்கு நோக்கி உலகத்திற்கு அருள் செய்துக்கொண்டு பயணிக்கிறார் என்பர்...