சேமம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

(கோப்பு)

பொருள்[தொகு]

சேமம்1 cēmam, பெ. (n.)

1. நல்வாழ்வு; safety, well-being, welfare.

  சேமமே யுன்றனக்கென் றருள்செய்தவன்(தேவா. 1136, 9);.

2. இன்பம் (சூடா.);; happiness, pleasure.


Skt. {ksēma}

[ஏமம் → சேமம்]

தங்குதலை அல்லது குடியிருத்தலைக் குறிக்கும் 'க்ஷி' என்னும் முதனிலையை வடவர் மூலமாகக் காட்டுவது பொருந்தாது.

சேமம்2 cēmam, பெ. (n.)

1. காவல் (சூடா.);; protection, preservation, security, defence, safe guard.

  சேம வன்மதில்(தேவா. 93, 4);. சி.

2. அரணான இடம்; stronghold, secure place.

  காப்புச் சிந்தைசெய்துவே றிடத்தொரு சேமத்தின் வைத்தார்(பெரியபு. அமர்நீதி. 16);.

3. சிறைச்சாலை; prison, dungeon.

  சேமந் திறந்தனை. . . எய்துதி(உபதேசகா. சிவநாம. 90);.

4. படைத் தொழில் ஐந்தனுள் பகைவரது அம்பு தன்மேற்படாமற் காக்குஞ் செயல்; act of a warrior protecting himself against hostile arrows;


one of {pañja-kiruttiyam.}

'எய்தாற் கருவியாலே மறைத்துச் சேமஞ் செய்யு மாறும்' (சீவக. 1676, உரை.);.

5. சவக்காப்பு (வின்.);; binding and shrouding a corpse for burning or interment.

[ஏமம் → சேமம்]

சேமம்3 cēmam, பெ. (n.)

1. புதைபொருள்; hoard,treasure-trove.

  சேமம்போ யெடுப்பவர்(பிரபுலிங். சித்தரா. 49);.

2. ஓலைச் சுவடியின் கட்டு; tying of ola book.

  புத்தகந்தன்னைச் சேமநீக்கின னோதினான்(திருவாத பு. திருவடி. 20);.

[ஏமம் → சேமம்]

சேமம்4 cēmam, பெ. (n.)

பலவகை அணுக்களின் சேர்க்கை; a unit of a group of atoms.


Skt. {kshëma}

[சேர்மம் → சேமம்]

"https://ta.wiktionary.org/w/index.php?title=சேமம்&oldid=1912264" இலிருந்து மீள்விக்கப்பட்டது