ஜகன்னாதன்
Appearance
தமிழ்
[தொகு]ஜகன்னாதன், .
பொருள்
[தொகு]- இறைவன் -- திருமால்/கண்ணன்
- உலகநாதன் -- உலகத்தின் நாதன்
மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்
- the god of universe - lord vishnu/krishna
விளக்கம்
[தொகு]- திசைச்சொல்-வடமொழி-தத்பவம்...ஜகம் என்றால் சகல அண்டங்கள்/எல்லா உலகங்கள் என்னும் பொருள்...நாதன் என்றால் தலைவன் என்னும் பொருள்...அகவே சகல அண்டங்களுக்கும் தலைவன் ஜகன்னாதன் எனப்படுகிறார்...இந்து மத சம்பிரதாயத்தில் திருமால் அல்லது அவரின் ஒன்பதாவது அவதாரமான கண்ணபிரானைக் குறிக்க மட்டுமே இச்சொல் பயன்படுத்தப்படுகிறது...இந்தத் திருநாமம் கொண்ட இறைவனுக்காகவே இந்திய மாநிலம் ஒடிசாவில் பூரி நகரில் மிகப் புகழ்வாய்ந்த திருக்கோயில் இருக்கிறது...இங்கு ஜகன்னாதன் கண்ணன் அவதாரத்தில் வழிபடப்படுகிறார்...அவரின் சகோதரர் பலபத்திரரும் சகோதரி சுபத்திரையும் இவருடன் கோவில் கொண்டுள்ளனர்...விக்கிரகங்கள் மற்ற கோவில்களைப்போல் உலோகத்தாலோ அல்லது கல்லாலோ ஆனவை அல்ல.. மரத்தினாலானது...புருஷோத்தமன் என்று அழைக்கப்படும் தெய்வமும் இவரே...பூரி நகரில் ஆண்டுதோறும் நடக்கும் ஜகன்னாத் ரத யாத்ரா என்னும் தேர்த் திருவிழா உலகப்புகழ் வாய்ந்தது... உலகெங்கும் ஒடிய இந்து மக்கள் அதிகம் வசிக்கும் இடங்களிலும், இஸ்கான் என்னும் அனைத்துலக கிருஷ்ண பக்தி இயக்கம் செயல்படும் இடங்களிலும் இந்தத் திருவிழா சிறப்பாக நடைபெறுகிறது...
-
பூரி ஜகன்னாதர் ஆலயம்
-
பூரி கோவிலின் கருவறையில் ஜகன்னாதர்
-
புகழ்மிக்க ஜகன்னாதர் ரத யாத்திரை...மூன்று தெய்வங்களுக்கும் தனித் தனி தேர்கள்.
-
பூரி கோவிலின் மூன்று தெய்வங்கள்.