ஜானவாசம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
வடஇந்திய ஜானவாசம்.தமிழகத்தில் திறந்த மகிழுந்தில் மணமகனை அழைத்துச் செல்வர்

தமிழ்[தொகு]

ஜானவாசம், பெயர்ச்சொல்.

பொருள்[தொகு]

  1. மணமகனை ஊருக்குக்காட்டும் நிகழ்வு.
  2. கல்யாண ஊர்வலம்

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. a procession in which bridegroom is taken around through residential areas of a town/village etc.,

விளக்கம்[தொகு]

  • திசைச்சொல்..வடமொழி..தத்பவம்.. தாலி கட்டும் முகூர்த்த நாளுக்கு முன் தினம் மாலை/இரவு மணமகனை ஓர் ஊர்தியில் அனைவரும் காணும் வண்ணம் உட்காரவைத்து இசை முழக்கத்தோடு ஊரிலுள்ள ஒரு கோயிலுக்கு ஊர்வலமாக அழைத்துச் சென்று இறைவனிடம் மறுநாள் திருமணம் சுபமாக முடிய வேண்டுதல் செய்து கொண்டு மீண்டும் அதே பாணியில் கலியாணம் நடக்குமிடம் சேருவர்...இந்தச்சொல் 'ஜனவாசம்' என்னும் சொல்லின் திரிபு...இவர்தான் இந்த வீட்டு மாப்பிள்ளை என்று ஊரிலுள்ளோருக்குத் தெரிவித்து அவரைப்பற்றி எவருக்கேனும் ஏதாவது நல்லன அல்லாத செய்திகள் தெரிந்திருந்தால் பெண் வீட்டாருக்குத் தெரிவிக்கும்படியான ஒரு ஏற்பாடு இது...ஜனங்கள் (மக்கள்) செறிந்து வாசம் செய்யும்(வாழும்) இடங்களினூடே மணஊர்வலம் செல்லுமாதலால் 'ஜனவாசம்' அல்லது ஜானவாசம் எனப்பட்டது...
  • இன்னொருவகையான கல்யாண ஊர்வலத்தில் மணமகன், மணமகள் இருவரையுமே ஓர் ஊர்தியில் அமரவைத்து இசைக்கருவிகள் முழங்க ஊரை வலம் வருவர்...இதன் நோக்கமும் மணமக்களை ஊரறியச் செய்வதேயாகும்...
"https://ta.wiktionary.org/w/index.php?title=ஜானவாசம்&oldid=1992329" இலிருந்து மீள்விக்கப்பட்டது