ஜாபிதா

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
ஜாபிதா--ஓர் எடுத்துக்காட்டு
ஜாபிதா--ஓர் எடுத்துக்காட்டு
ஜாபிதா--ஓர் எடுத்துக்காட்டு

தமிழ்[தொகு]

ஜாபிதா, பெயர்ச்சொல்.

பொருள்[தொகு]

  1. பட்டியல்
  2. அட்டவணை
  3. குறிப்புச் சீட்டு

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. a list

விளக்கம்[தொகு]

  • திசைச்சொல்...உருது மொழியில் மூலச்சொல்...வாங்க வேண்டிய/விற்க வேண்டியப் பொருட்கள், செய்ய வேண்டியக் காரியங்கள், அழைக்கப்பட வேண்டிய விருந்தினர்கள், போகவேண்டிய இடங்கள், சந்திக்க வேண்டிய நபர்கள் இப்படி நடைமுறையில் சகல விடயங்களுக்கும் மறந்துவிடாமல் இருக்கவும்,திட்டமிடவும், முறையாகச் செயல் புரிவதற்கும் ஏதுவாக வரிசையாக ஒரு காகிதத்தில் குறிப்பு எடுத்து வைத்துக்கொள்வர்...இந்தக் குறிப்புகளையே 'ஜாபிதா' என்பார்கள்...

பயன்பாடு[தொகு]

  1. இந்த மாதம் வீட்டிற்கு என்னென்ன மளிகை சாமான்கள் வேண்டும் என்று ஒரு ஜாபிதா போட்டுக்கொடு...
  2. நாம் அடுத்த மாதம் வடக்கே யாத்திரை போகலாம்...எந்தெந்த ஊர்களுக்குப் போகலாம் என்று ஒரு ஜாபிதா போட்டுக்கொள்...
  3. நம் வீட்டு கிருகபிரவேசத்திற்கு யார் யாரைக் கூப்பிடவேண்டும் என்று ஒரு ஜாபிதா எடு...
  4. சுனந்தாவின் திருமணத்திற்குச் செய்யவேண்டிய எல்லா காரியங்களுக்கும் ஒரு ஜாபிதா போட்டு வை...எதையும் மறந்துவிடக் கூடாது...எல்லாமே முறையாக நடக்கவேண்டும்...


( மொழிகள் )

சான்றுகள் ---ஜாபிதா--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஜாபிதா&oldid=1880261" இருந்து மீள்விக்கப்பட்டது