ஜோகி
ஜோகி என்பது ஒரு சாதிப்பிரிவு.மிகவும் பின்தங்கிய பட்டியலில் உள்ளது.பெரும்பாலும் இவர்கள் மதுரை , அறந்தாங்கி ,புதுக்கோட்டை ,சென்னை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர்,திருவள்ளூர், கடலூர்,விழுப்புரம் ,கிருஷ்ணகிரி, தர்ம்புரி மாவட்டங்களில் வாழ்ந்து வருகின்றனர்.இவர்களை பற்றிய வரலாறு எதுவும் இல்லை...பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நிலையிலே உள்ளனர்..இவர்கள் நாயக்கர் இனத்திலும் உள்ளவரகா கருதப்படுகிறது.
கைரேகைச் சட்டம்
[தொகு]குற்றப் பரம்பரைப் பட்டியலில் கொண்டுவரப்பட்ட சாதி ஆண்கள் குறிப்பாக 16 வயதிற்கும் 60 வயதிற்கும் இடைப்பட்டவர்கள் காவல் கண்காணிப்பில் இருக்கவேண்டும். அவர்களிடம் நாள்தோறும் கைரேகை பதிவு செய்யப்படும். மேற்கண்ட சாதிகளில் குறிப்பாகக ஜோகிநாயக்கர், மறவர், நாயக்கர் ,அம்பலக்காரர், வலையர் போன்ற சில சமூகத்தினர் கைரேகைச் சட்டத்தில் சேர்க்கப்பட்டனர். விவசாய நிலம் வைத்திருந்த விவசாயிகள், நிலவரி கட்டுபவர்கள், நிரந்தரத் தொழில் செய்வோர், அலுவலர், நிரந்தரமாக ஒரே இடத்தில் வசிப்போர் ஆகிய பெரும்பான்மையோர் கைரேகைச் சட்டத்தில் இணைக்கப்படவில்லை.
1921 ஆம் ஆண்டில் கள்ளர்கள் மற்றும் அம்பலக்காரர் தலைமையிலேயே கண்காணிப்பு கிராமங்களாக ‘கள்ளர் மற்றும் அம்பலக்காரர் பஞ்சாயத்துக்கள்’ உருவாக்கப்பட்டன. உள்ளூரிலேயே அதே சாதியைச் சேர்ந்த கள்ளர் சமுதாயத்தைச் சார்ந்தவர்களும் இடம் பெற்றிருந்த ஒரு குழுவிடம் ஒரு பதிவேடு இருக்கும். அதிலேயே கைரேகை வைக்கலாம். ஆனாலும் பல நேரங்களில் அவர்கள் காவல் நிலையத்தில் தூங்குமாறும், அருகே இருக்குமாறும் கட்டாயப்படுத்தப்பட்டனர். வெளியூர் செல்ல வேண்டுமென்றால் அந்தக் குழுவிடம் அடையாளச் சீட்டு வாங்கிச் செல்ல வேண்டும். தாம் செல்லும் ஊரில் இருக்கும் ஊர்ப் பெரியவர் குழுவில் இந்த அடையாளச் சீட்டைக் காண்பிக்க வேண்டும். அடையாளச் சீட்டு இல்லாதவர்கள் கைது செய்யப்படுவார்கள். அடையாளச் சீட்டு இல்லாமல் அடிக்கடி கைதாகும் நபர்கள் தனியாகப் பட்டியலிடப்பட்டு அவர்கள் நேரடியாகக் காவல்நிலையத்தில் கைரேகை வைக்க வலியுறுத்தப்பட்டனர்.