தண்டனை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • புறமொழிச்சொல்--சமசுகிருதம்--दण्डन---த3ண்ட3ந--மூலச்சொல்
பொருள்
  • தண்டனை
  1. சிட்சை
    (எ. கா.) முறைமையிற் றண்டனை புரிவேன் (சிவரக. தேவர்முறை. 5).
மொழிபெயர்ப்புகள்
  1. penalty
விளக்கம்
  • தண்டனையானது, தண்டம், மானக்கேடு, வேதனைப்பாடு, சிறைப்பு, வேலைநீக்கம், கொலை என அறுவகைப் பட்டிருந்தது. அவற்றுள், தண்டம் என்பது தொகையிறுப்பு, தண்டத் தீர்வை, கோயில் விளக்கெரிப்பு என மூவகை. தொகையிருப்பாவது ஒரு குறித்த தொகையை மொத்தமாய்ச் செலுத்தல். இனி, மன்றுபாடு தண்டா குற்றம் என மூவகைத் தண்டமுங் கூறப்படும். அவை இன்னவென்று திட்டமாய்த் தெரியவில்லை.1 மானக்கேடு என்பது, முகத்திற் செம்புள்ளி கரும்புள்ளி குத்திக் கழுதை மேலேற்றி ஆன்மயந் தோய்த்த அலகாலடித்து ஊர்வலம் வருவித்தலும், குலத்தினின்று விலக்கலும் ஆகும்.
  • வேதனைப்பாடு என்பது, தூணிற் கட்டிவைத்து 50 அடி முதல் 100 அடிவரை அடித்தல், கல்லேற்றல், வெயிலில் நிற்பித்தல், கிட்டி பூட்டல், நடைவிளக்கெரித்தல் எனப் பலவகைப்படும். கிட்டி என்பது கெண்டைக்காலை நெருக்கும் ஒருவகைக் கருவி. நடை விளக்கெரித்தல் என்பது, தலையில் அகல்விளக்கேற்றி ஊர்வலம் வருவித்தல்.
  • சிறைப்பு என்பது, தலையிட்டுச் சிறைக் கோட்டத்தில் வைத்தல், கொலை என்பது, வெட்டல், கழுவேற்றல், விலங்காற் கொல்வித்தல், சித்திரவதை செய்தல் என நால்வகை. யானையை விட்டு மிதிப்பித்தலும், புலிக்கருத்துதலும் போல்வன விலங்காற் கொல்வித்தல். எருமைக் காலிற் கட்டியோட்டுதலும் வண்டிச் சக்கரத்திற் கட்டியோட்டுதலும் போல்வன சித்திரவதையாகும்.


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

ஆதாரம் --->David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி - தண்டனை

"https://ta.wiktionary.org/w/index.php?title=தண்டனை&oldid=1984279" இலிருந்து மீள்விக்கப்பட்டது