தண்ணீர் காட்டுதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தண்ணீர் காட்டுதல்

சொல் பொருள் விளக்கம்

“ஒரு கொள்ளைக்கூட்டம் கட்டுப்பாடான அந்த ஊர்க்குத் தண்ணீர் காட்டியிருக்கிறது” உனக்கு ஒரு நாள் தண்ணீர் காட்டாமலா விடுவான்; அப்பொழுது உண்மை புரியும்” என்பன போன்ற வழக்குகள் தண்ணீர் காட்டுதல் என்பதற்குத் ‘தப்பி விடுதல்’ என்னும் பொருள் உள்ளதை விளக்கும். தப்பி விடுதலும், நயவஞ்சகமாக ஏமாற்றித் தப்பிவிடுதலாம். தண்ணீர் தெளித்தல் என்பது தாரைவார்த்தல் என்பது போன்றதே. தாரை வார்த்தல் கொடைப் பொருள். தண்ணீர் தெளித்தல் என்பது கழித்துக் கட்டல் என்னும் பொருளதாம். ‘உன்னைத் தண்ணீர் தெளித்து விட்டார்கள்’ என்றால் உன்னைக் கைவிட்டுவிட்டார்கள். புறக்கணித்துவிட்டார்கள். ஒதுக்கி விட்டார்கள் என்னும் பொருள் தருவதாம். கொடுத்த பொருள், கொடுத்தவர் உரிமையை விட்டு நீங்கி விடுவதேயன்றோ! அப்பொருளில் வருவது தண்ணீர் தெளித்தலாம்.

"https://ta.wiktionary.org/w/index.php?title=தண்ணீர்_காட்டுதல்&oldid=1913021" இலிருந்து மீள்விக்கப்பட்டது