தரும அடி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
தரும அடி என்பது ஏறக்குறைய இப்படித்தான்

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

தரும அடி, பெயர்ச்சொல்.

பொருள்[தொகு]

  1. சம்பந்தமில்லாதவர் கொடுக்கும் அடி

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. physical hittings/beatings by persons not connected to a particular incident.

விளக்கம்[தொகு]

  • தருமம் + அடி = தரும அடி...சென்னை வட்டாரப் பேச்சு மொழி...ஒருவன் ஏதோ ஒரு தவறு/குற்றம் செய்துவிடுகிறான்...பாதிக்கப்பட்டவன் கோபத்தில் அவனை அடிக்கிறான்...ஆனால் எவ்வகையிலும் அவன் செய்த தவறால்/குற்றத்தால் பாதிக்கப்படாதவர்களும் ஆளுக்கொரு அடி, காரணம் அறியாமலேயே, ஒர் உந்துதலால் அவனுக்குக் கொடுக்கிறார்கள்... இவ்வகை அடிக்கு தரும அடி என்பர்...தருமம் என்பது இந்தச்சொல்லில் சும்மா, நோக்கம் இல்லாமல் என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டது

பயன்பாடு[தொகு]

  • பாவன் அவன்...அவன் ஆடிய கோலி முனியாண்டி கண்மேல் மேல் பட்டுவிட்டதாம்...கோபப்பட்டு முனியாண்டி அவனை அடிக்க, சாலையில் போவோர் வருவோரும் அவனுக்கு ஆளுக்கொரு தரும அடி கொடுத்தனர்...
"https://ta.wiktionary.org/w/index.php?title=தரும_அடி&oldid=1226598" இலிருந்து மீள்விக்கப்பட்டது