தலைக்கறி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
வெட்டுண்ட ஆடுகளின் தலைகள்
வாட்டப்பட்ட ஆட்டின் முழுத்தலை
ஆட்டின் தலைப்பகுதி
அயிலைமீனின் தலைப்பகுதி
அயிலைமீன்
தலைக்கறிக்கேற்ற மீன்கள்


தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

தலைக்கறி, பெயர்ச்சொல்.


பொருள்[தொகு]

  1. ஆட்டுத்தலை இறைச்சி அல்லது அதைக்கொண்டு தயாரிக்கப்பட்ட உணவு
  2. மீன்களின் தலைகளினால் தயாரிக்கப்பட்ட உணவு


மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. head meat of goat or fish and it's food preparations.


விளக்கம்[தொகு]

  • தலை + கறி = தலைக்கறி....உணவுக்காக/நேர்த்திக் கடனுக்காகக் கொல்லப்பட்ட ஆட்டில் உடலில் எந்தப்பகுதியையும் வீணாக்காமல் அசைவ உணவுப் பிரியர்கள் சமைத்து உண்பர்...ஆட்டுத்தலை இறைச்சியால் சமைத்த உணவுக்குத் தலைக்கறி அல்லது தலைக்கறி குழம்பு என்று அழைப்பர்...தலைக்கறி பெரட்டல் எனும் மற்றொருவகைத் தயாரிப்பும் உண்டு......தமிழக செட்டிநாட்டு சமையற்கலையில் மிகப் புகழ்மிக்க உணவு வகைகள்...உலகெங்கும் ஆட்டின் தலையை பலவிதமான பக்குவங்களில் சமைத்து உண்கிறார்கள்...தமிழ் நாட்டைப் பொருத்தவரை வெட்டுப்பட்ட ஆட்டின் தலையிலுல்ள உரோமங்களை முதலில் நெருப்பில் பொசுக்கி பலமுறை தண்ணீரில் மிகச் சுத்தமாகக் கழுவி எடுப்பர்..பின்னர் மூளை, நாக்கு,கண்கள் மற்றும் காதுகளை தனியே எடுத்துவிட்டு தலையை துண்டு துண்டாக வெட்டி பிற மசாலைப் பொருட்களோடு சேர்த்து சமையலுக்குப் பயன்படுத்துவர்...ஆட்டின் தலையை உணவுக்காக ஆயத்தப்படுத்துவதற்கு தனித் திறமை வேண்டும்...பெரும்பாலும் இறைச்சிக் கடைக்காரர் இந்தக் காரியத்தைச் செய்துக்கொடுப்பார்...சில உலகநாடுகளில் சுத்தம் செய்யப்பட்ட ஆட்டின் தலைகளை முழுவதுமாகவோ அல்லது இரண்டுப்பாகங்களாக நீள்வாட்டில் பிளந்தோ சமைப்பார்கள்...இதுவே ஆட்டுத் தலைக்கறி...ஆட்டுத்தலையிலிருந்து நீக்கப்பட்ட மூளை, நாக்கு, கண்கள், காதுகளை தனித்தனியே பலவேறு பக்குவங்களில் சமைத்து உண்பர்...
  • அயிலைமீன் போன்ற சில பெரிய வகை மீன்களின் தலைகளைத் தனியே வெட்டியெடுத்து முழுத்தலையையும் பிற மசாலைப் பொருட்களோடுக் கலந்து குழம்புப்பக்குவத்தில் சமைத்து உண்பர்...இதுவே மீன் தலைக்கறி...இந்தியாவின் கேரளப்பகுதிகளில் மிகப் பிரசித்தமான உணவு...
"https://ta.wiktionary.org/w/index.php?title=தலைக்கறி&oldid=1215317" இலிருந்து மீள்விக்கப்பட்டது