தலைமாட்டு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தலைமாட்டுப் பக்கம் கட்டில்

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

தலைமாட்டு, (உரிச்சொல்).

பொருள்[தொகு]

  1. தலைமாடு(பெ)
  2. தலைப்பக்கம்


மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. the head of a bed, or of a person in bed.

விளக்கம்[தொகு]

  • ஒருவர் படுத்துறங்கும்போது கட்டிலில் அவருடைய தலைப் பக்கத்து இடத்தைத் தலைமாட்டுப் பக்கம் என்பர்...

[1]

பயன்பாடு[தொகு]

  • மகாபாரதப் போரின்போது ஆதரவு கோரி பாண்டவர்கள் சார்பில் தருமரும், கௌரவர்கள் சார்பில் துரியோதனனும் கண்ணனின் இருப்பிடம் சென்றபோது, கண்ணன் தூங்கிக்கொண்டிருந்தார்...அப்போது தான் ஒரு சக்கரவர்த்தி என்னும் செருக்கில் துரியோதனன் கண்ணன் தலைமாட்டில் அமர்ந்துக்கொண்டான்...தருமரோ மிகப் பணிவாகக் கண்ணனின் கால் பக்கத்து இடத்தில் உட்கார்ந்தார்...கண் விழித்த கண்ணன் முதலில் தருமரின் முகத்தைப் பார்த்ததால் பாண்டவர்களுக்கே தன் ஆதரவு என்று தெரிவித்துவிட்டார்...
"https://ta.wiktionary.org/w/index.php?title=தலைமாட்டு&oldid=1278234" இருந்து மீள்விக்கப்பட்டது