உள்ளடக்கத்துக்குச் செல்

தாள்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தால்

தமிழ்

[தொகு]
(கோப்பு)

பொருள்

[தொகு]
  • தாள், பெயர்ச்சொல்.
  1. காகிதம் - எழுதுவதற்கு அல்லது அச்சிடுவதற்கு அல்லது பை செய்வதற்குப் பயன்படும் மரநார் கொண்டு செய்யப்பட்ட மெல்லிய தட்டையான பொருள்.
  2. பாதம்; கால்
  3. கால். எண்குணத்தான் றாளை (குறள், 9).
  4. மரமுதலியவற்றின் அடிப்பகுதி. விரிதான கயிலாய மலையே (தேவா. 1156, 1).
  5. பூ முதலியவற்றின் அடித்தண்டு. தாணெடுங் குவளை (சீவக. 2802).
  6. வைக்கோல்.(பிங்.)
  7. விளக்குத் தண்டு. (W.)
  8. படி. குண்டுகண் கழிய குறுந்தாண் ஞாயில் (பதிற்றுப். 71, 12).
  9. ஆதி. (சூடா.)
  10. சட்டைக் கயிறு. தாளுண்ட கச்சிற் றகையுண்ட (கம்பரா. பூக்கொய். 14).
  11. விற்குதை. (W.)
  12. வால்மீன் விசேடம். குளமீனொடுந் தாட்புகையினும் (புறநா. 395).
  13. ஒற்றைக் காகிதம். Mod.
  14. தாழ்ப்பாள். தம்மதி றாந்திறப்பர் தாள் (பு. வெ. 9, 24).
  15. கொய்யாக்கட்டை.
  16. முட்டுவாயின் ஊடுருவச் செறிக்கும் கடையாணி. தாளுடைக் கடிகை நுழைநுதி நெடுவேல் (அகநா. 35).
  17. திறவுகோல். இன்பப் புதாத்திறக்குந் தாளுடைய மூர்த்தி (சீவக. 1549).
  18. தாடை. தாள் கிட்டிக்கொண்டது.
  19. கண்டம்

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. paper
  2. feet
  3. (M. tāḷ.) Leg, foot;
  4. Foot of a tree or mountain;
  5. (K. tāḻ, M. tāḷ.) Stem, pedicle, stalk;
  6. Straw;
  7. Lampstand, candle-stick;
  8. Stairs;
  9. Origin, commencement, beginning;
  10. Tying string of a jacket;
  11. Ends of a bow;
  12. A comet;
  13. (M. tāḷ.) Sheet of paper;
  14. cf. tāla. (K. tāḻ, M. tāḷ.) Bolt, bar, latch;
  15. Wooden catch turning on a central screw that fastens a pair of shutters;
  16. Pin that holds a tenon in a mortise;
  17. Key;
  18. cf. tālu. Jaws;
  19. Adam's apple;

சொல்வளம்

[தொகு]

( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=தாள்&oldid=1911705" இலிருந்து மீள்விக்கப்பட்டது