உள்ளடக்கத்துக்குச் செல்

திதித்துவயம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

பஞ்சாங்கத்தில் ஒரு சில குறிப்பிட்ட நாட்களுக்கு எதிரே ‘திதித்வயம்’ என குறிப்பிட்டிருப்பார்கள். ‘த்வயம்’ என்றால் ‘இரண்டு’ என்று பொருளாகும். ‘திதித்வயம்’ என்றால் இரண்டு திதிகள் என்று பொருளாகும். ஒரே நாளில் இரண்டு சிரார்த்த திதிகள் அனுசரிக்கப்படுவதைத்தான் ‘திதித்வயம்’ என்கிறார்கள். 60 நாழிகைகள் கொண்ட ஒரு நாளில் பகல் பொழுதின் அளவு 30 நாழிகைகளாகும். பகல் பொழுதானது 5 வகையான காலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. 30 நாழிகைகளை 5 பாகமாக பிரித்தால் ஒரு பாகத்திற்கு 5 நாழிகைகள் வரும். அவை கீழே தரப்பட்டுள்ளது. சூரிய உதயம் முதல் 6 நாழிகைகள் வரை - பிராத காலம் 6 நாழிகைகள் முதல் 12 நாழிகைகள் வரை – சங்கவ காலம் 12 நாழிகைகள் முதல் 18 நாழிகைகள் வரை – மத்தியான காலம் 18 நாழிகைகள் முதல் 24நாழிகைகள் வரை – அபரான்ன காலம் 24 நாழிகைகள் முதல் 30 நாழிகைகள் வரை – சாயங்காலம் மேற்கண்டவாறு பிரிக்கப்பட்டுள்ள பகல் பொழுதில் அபரான்ன காலமே இறந்து போன முன்னோர்களுக்கு பித்ரு பூஜை செய்ய உகந்த காலமாகும். அபரான்ன காலத்தைத்தவிர பிற காலங்களில் செய்யப்படும் தர்ப்பனங்கள் பித்ருக்களை சென்றடைவதில்லை எனக்கூறப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட நாளில் சூரிய உதயத்திற்குப்பின் 18 நாழிகைகளுக்கு மேல் 24 நாழிகைக்குள் ஒரு திதி முடிந்து இன்னொரு திதி ஆரம்பமாகி, ஆக இரண்டு திதிகள் இருந்து அதற்கு முந்தைய நாளிலும் , அதற்கு அடுத்த நாளிலும் அபரான்ன காலத்தில் அந்த இரண்டு திதிகளும் இல்லையென்றால் ஒரே நாளில் அந்த இரண்டு திதிகளில் இறந்தவர்களுக்கும் சிரார்த்தம் அல்லது வருடாந்திர திதி கொடுக்கவேண்டும் என்று கூறப்படுகிறது. இதை பஞ்சாங்கத்தில் திதித்வயம் என குறிப்பிட்டிருப்பார்கள்.

"https://ta.wiktionary.org/w/index.php?title=திதித்துவயம்&oldid=1998261" இலிருந்து மீள்விக்கப்பட்டது