திராவிட வேதம்
Appearance
தமிழ்
[தொகு]
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
திராவிட வேதம், .
பொருள்
[தொகு]- ஆழ்வார்கள் ஆக்கிய நாலாயிர திவ்விய பிரபந்தம் என்கிற புனித நூல்...
மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்
- hindu holy verses by alwars, in tamil, praising lord narayana/vishnu a hindu god.
விளக்கம்
[தொகு]- கி.பி ஏழு முதல் ஒன்பதாம் நூற்றாண்டு வரை தமிழகத்தில் வாழ்ந்த பன்னிரு வைணவ சமயக் குரவர்களால் திருமாலின் புகழ்பாடி இயற்றப்பட்ட பாசுரங்கள் (பாக்கள்) அடங்கிய தொகுப்பு நூலுக்கு திராவிட வேதம் என்று பெயர்...ஆழ்வார்கள் பன்னிருவர் இயற்றிய பாசுரங்களோடு, திருவரங்கத்தமுதனார் என்று அழைக்கப்பட்ட வைணவச் சமயக் குரவர் செய்த இராமாநுச நூற்றந்தாதி எனும் நூலின் பாசுரங்களையும் சேர்த்து நான்காயிரம் பாசுரங்களைக்கொண்டது...நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம்,திராவிடப் பிரபந்தம் என்றெல்லாம் போற்றப்படுகிறது...தென்னிந்திய வைணவக் கோயில்களில் பூசைக்கு வடமொழி ஆக்கங்களோடு நாலாயிர திவ்வியப் பிரபந்தப் பாசுரங்களும் ஓதப்படுகின்றன...முதல் நான்கு வேதங்களின் பொருள் அனைத்தையும் உள்ளடக்கிய நூல் என்பதால் அந்த வேதங்களுக்கு இணையாகப் பக்தியோடும் மதிப்போடும் வைணவர்களால் போற்றப்படும் நூல்...திராவிட (द्राविड) என்று சமசுகிருதத்தில் குறிப்பிடப்பட்ட தமிழ் மொழியிலேயே நாலாயிரம் பாக்களும் அமைந்திருப்பதால் இந்த நூலுக்கு திராவிட வேதம் என்றும் தமிழ் வேதமென்றும் பெயர்கள் உண்டாயின...