உள்ளடக்கத்துக்குச் செல்

திருக்கை மீன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
திருக்கை மீன்
திருக்கை மீன்

தமிழ்

[தொகு]
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

திருக்கை மீன்,

பொருள்

[தொகு]

ஒரு கடல்வாழ் மீன் இனம

மொழிபெயர்ப்பு

[தொகு]
  • ஆங்கிலம்
  1. whipray fish
  2. rayfish

விளக்கம்

[தொகு]
  • உலகம் முழுவதும் பலவேறு நிறங்களில், உருவத் தோற்றங்களில் கடலில் வாழும் ஒரு மீன் இனம்... இவற்றில் பல நூற்றுக்கணக்கான வகைகள் உள்ளன...இவை பெரும்பாலும் தட்டையான வடிவ உடலும், உடலைவிட நீளமான வாலும் கொண்டிருக்கும்... இந்தவால்தான் இவ்வகை மீனின் ஆயுதம்...நினைத்த பக்கம் இலக்கு வைத்துச் செல்லவும், தன்னைக் காப்பாற்றிக்கொள்ளவும் வால் பயன்படுகிறது...கடலுக்கடியில் வாழும் சிறு மீன்களையும் மற்றச் சிறு உயிரினங்களையும் வேட்டையாடி உண்ணும்... மீன் இனத்தைச் சேர்ந்தவையாக இருந்தாலும் இவை குஞ்சு பொரித்து இனப்பெருக்கம் செய்பவை மற்றும் செதில்களும் இருப்பதில்லை... கடலின் அடியில் தங்கி வாழும் தன்மை கொண்டவை...இதன் உடலில் இருபுறத்திலும் அமைந்த அகலமான விரிந்த பகுதியின் மூலம் நீந்திச் செல்லும்... திருக்கை மீன்கள் மனிதர்களின் உணவுக்காக வேட்டையாடப்பட்டன... இதன் தோல் மற்றும் வாலும் பயன்பட்டன... வாலை குற்றவாளிகளுக்கு கசையடி தண்டனையை நிறைவேற்றவும் தங்களை எதிரிகளிடமிருந்து காத்துக்கொள்ள ஓர் ஆயுதமாகவும் ஒருகாலத்தில் பயன்படுத்தினர் என்று கூறுவர்...தற்போது இவைகளில் பல வகைகள்முழுஅழிவிலிருந்து காப்பாற்றப்பட 'பாதுகாக்கப்பட்ட' உயிரினமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
"https://ta.wiktionary.org/w/index.php?title=திருக்கை_மீன்&oldid=1220222" இலிருந்து மீள்விக்கப்பட்டது