துடியன்
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- துடியன், பெயர்ச்சொல்.
துடியன் என்றால் வேட்டை ஆடுபவன், வீரம்மிக்கவன், கரியநிறத்தவன், இசைப்பவன் என்றும், துடி என்னும் சங்ககால இசை கருவியை வாசித்து தமிழ் மொழியை இயல், இசை, நாடகம் எனும் முத்தமிழ் வளர்த்த மூத்த தமிழ் குடியை சேர்ந்தவன் என்பது பொருள்.
பண்டைய சங்ககால இலக்கியம் புறநானுறு, மாங்குடி கிழார் எழுதிய 335-வது பாடல். கடவுள் இலவே! என்ற பாடல் வரியில் சொல்லப்பட்ட பண்டைய சங்ககால நான்கு குடிகளில் ஒன்று துடியன் .
பாடல் வரி :
"துடியன் பாணன் பறையன் கடம்பனென்று இந்நான் கல்லது குடியும் இல்லை;"
இக்குடிகள் முத்தமிழ் இயல் (இயற்தமிழ்), இசை (இசைத்தமிழ்), நாடகம் (நாடகத்தமிழ்)வளர்த்த மூத்த குடிகள், சங்ககாலத்தில் உள்ள நான்கு தமிழ் குடிகளின் பெயர்கள்:
- 1.துடியன் 2.பாணன் 3.பறையன் 4.கடம்பன்
பாடலை இங்கு பார்க்கவும்
புறநானுறு 335-வது பாடல் மாங்குடி கிழார் எழுதியது
வாழ்வியல் முறை : இயல் என்பது எழுதப்படுவதும் பேசப்படுவதுமாகிய தமிழ். ஆதி தமிழன் விலங்குகளிடமிருந்தும், பறவைகளிடமிருந்தும் கற்றுக்கொண்ட மொழியை முதலில் பேசி, குறியீடு வடிவில் மலைக்குன்றுகள், மண்பாண்டங்கள், ஓலைச்சுவடிகள் போன்றவற்றில் எழுதி குறிஞ்சி தினையான மலைக்குன்றுகளில் குடிகொண்டு ஆட்சி செய்து தமிழ் வளர்த்து, காடும் காடு சார்ந்த நிலமும் முல்லைத் திணையில் வாழ்ந்த உண்ணக்கூடிய விலங்குகள், இயற்க்கை அருளிய காய்கள், கனிகள், விதைகள், தினை, வரகு, கொள், அவரை, தேன் ஆகியவற்றை உண்டும், கடலும் கடல் சார்ந்த குளம், குட்டை, ஏரிகள், ஆறுகள் எனப்படும் நெய்தல் தினையின் உண்ணக்கூடிய நீர்வாழ் உணவுகளையும் உண்டு வாழ்ந்து வந்த மூத்த தமிழ் குடிகள் இவர்கள் 1.துடியன் 2.பாணன் 3.பறையன் 4.கடம்பன்.
வழிபாட்டு முறை : பிரபஞ்சத்தில் நிலம், நீர், நெருப்பு, காற்று மற்றும் ஆகாயம் ஆகிய ஐந்து இயற்க்கையும் ஆண், பெண் இருவருக்கும் சமம்மென்றும் , இவ்விருவரும் சமம்மென சிவ தத்துவத்தை சிவலிங்கவடிவில் சொல்லி இயற்கையை வணங்கி தமிழ் மொழியை காத்த இயற்கை கொடுத்த ஆதி தமிழன் 1.துடியன் 2.பாணன் 3.பறையன் 4.கடம்பன்.
இவர்கள் உண்ட உணவின் சிறப்புடையதாக சொல்லப்படும் பாடல் பாடலை இங்கு பார்க்கவும்
புறநானுறு 335-வது பாடல் மாங்குடி கிழார் எழுதியது
"கருங்கால் வரகே இருங்கதிர்த் தினையே சிறுகொடிக் கொள்ளே பொறிகிளர் அவரையொடு"
இக்குடிகள் முத்தமிழ் இயல் (இயற்தமிழ்), இசை (இசைத்தமிழ்)இயல்பான பேச்சு, இயல்பான எழுத்து என தமிழ் வளர்த்து தொடர்ந்து பல சங்க இலக்கியங்கள், பாடல்கள், கவிதைகள், கட்டுரைகள் என தமிழுக்கு அருளி துடி இசை(எழுதியும் , பேசியும், பாடியும், இசைத்தும்) கொண்டு தூங்கும் தமிழரை எழுப்பி தமிழ் மொழியை வளர்த்த மூத்த தமிழ் குடி துடியன் இவனே ஆகச்சிறந்த சிறப்புமிக்க தமிழ் குடி.
பிரபஞ்சத்தில் நிலம், நீர், நெருப்பு, காற்று மற்றும் ஆகாயம் ஆகிய ஐந்து இயற்க்கையும் ஆண், பெண் இருவருக்கும் சமம்மென்றும் , இவ்விருவரும் சமம்மென சிவ தத்துவத்தை சிவலிங்கவடிவில் சொல்லி இயற்கையை வணங்கி தமிழ் மொழியை காத்த இயற்கை கொடுத்த ஆதி தமிழன் துடியன். பின் தமிழனுக்கு ஆசிவகம் அருளிய அருட்கொடையும் துடியன்!.
பண்டைய தமிழன் மலைக்குன்றுகளில் குடிவாழ்ந்ததால் தமிழ் குன்றவன், குறவன்.முருகன், வேலன்,கந்தன், கடம்பன்,சாத்தன், ஈசன், பாலன் என்ற பல முன்னோர்களின் பெயர்களை கடவுளாக கொண்டு குன்றுகளில் முன்னோர்களுக்கு நடுகல் வைத்து வணங்கி வாழ்ந்த இடத்தை கோவிலாக கொண்டு பறை எனும் திரு மறை எழுதி ஓதி, பறை, யாழ், கடம் இசையுடன் கொம்பும் சங்கும் கொண்டு முழங்கி வணங்கி வருகின்றனர்.
பண்டைய தமிழர்களான இவர்களுடைய அனுபவ திறனில் இயற்கையாக அறிவில் சிறந்தவர்களாகவும், கலை, அறிவியியல், கணிதம், வானிலை, ஜோதிடம், புவியியல் போன்ற எண்ணற்ற துறைகளில் தனித்துவம் மிக்கவர்களாக திகழ்கின்ற்னர்.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- ..
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +