உள்ளடக்கத்துக்குச் செல்

தும்பைப்பூ

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
தும்பைப்பூ
தும்பைப்பூ
தும்பைப்பூ

தமிழ்

[தொகு]
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

தும்பைப்பூ, .

பொருள்

[தொகு]
  1. தும்பைச்செடியின் பூக்கள்.

மொழிபெயர்ப்பு

[தொகு]
  • ஆங்கிலம்
  1. flower of a herbal plant called 'thumbai' in tamil.

விளக்கம்

[தொகு]
இந்தியாவெங்கும் காணக்கூடிய தும்பை என்னும் செடியின் பூ...ஃபிலிபைன், ஜாவா, மொரிசியஸ் போன்ற இடங்களிலும் தாராளமாகக் கிடைக்கிறது...பூக்கள் சிறுத்து வெண்மையானதாய் காம்புகள் இல்லாமல் நேரடியாகச் செடியுடன் இணைந்த கொத்துக்களில் அடர்ந்து இருக்கும்...

மருத்துவ குணங்கள்

[தொகு]
இந்தப் பூவினால் தாகரோகம், சந்நிபாதசுரங்கள்,கண்களைப்பற்றிய குற்றங்கள் நீங்கும்..
  1. பூக்களைக் கசக்கிச் சாறு எடுத்து 15-30 துளிவரையில் இரண்டு பங்கு தேனுடன் சேர்த்துப் பெரியவர்களுக்குக் கொடுத்தால் சந்நிசுரம், தாகம் போகும்...
  2. குழந்தைகளுக்கு 12 துளி பூச்சாற்றுடன் தேன் கூட்டிக்கொடுக்கலாம்...இதனுடன் கஸ்தூரி அல்லது கோரோசனை கூட்டிக் கொடுக்க விரைவில் சீதளத்தையும் கபத்தையும் நீக்கும்...
  3. பூவைக் கசக்கித் துணியில் முடிச்சுப்போட்டுக் கண்களில் இரண்டொரு துளிவிட்டால் சந்நிரோகம் போகும்...
  4. பொதுவாக வைத்தியர்கள் சமயோசிதமாக இந்தப் பூச்சாற்றுடன் கட்டுமாத்திரைகளோ அல்லது செந்தூரங்களோ கூட்டிக்கொடுப்பது வழக்கமாகும்...
  • தமிழ்ஆதாரம்..[1]
"https://ta.wiktionary.org/w/index.php?title=தும்பைப்பூ&oldid=1218358" இலிருந்து மீள்விக்கப்பட்டது