தும்பையிலை
தமிழ்
[தொகு]Leucas Aspera-Leaves...(தாவரவியல் பெயர்)..
பொருள்
[தொகு]- தும்பையிலை, பெயர்ச்சொல்.
தும்பை எனும் செடியின் இலை
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
leaves of a herbal plant called 'thumbai' in tamil...Leucas Aspera
குணம்
[தொகு]தும்பையிலையால் பாம்பு, நஞ்சுப்பூச்சிகளின் விஷங்கள், வாதநோய், தலைவலி, கபக்குற்றம், அக்கினிமந்தம், சிலேஷ்மசந்நி ஆகியவை நீங்கும்...இதனைப் புளியிட்டுக் கடைந்து உணவோடு உண்பதுண்டு...இதனால் பிரமேகம், நேத்திரப்புகை, கைகால்களில் அசதி, தாகம், சோம்பல் இவைகள் உண்டாகும்...
உபயோகிக்கும் முறை
[தொகு]தும்பையிலையை அரைத்துப் பாம்புக் கடிக்கும், சிரங்குகளுக்கும் போடுவர்...இதன் சாற்றை நசியமிட தலைவலி, சலதோசம், பாம்பு நஞ்சு ஆகியவை போகும்...தும்பையிலை, அவுரியிலை, பெருங்காயம், வசம்பு, வெள்ளைப்பூண்டு, மிளகு இவைகளைச் சமனெடை கல்வத்திலிட்டு சிறு பிள்ளைகளின் அமுரி விட்டரைத்துத் துணியில் முடிந்து காது, மூக்கு இவைகளில் துளித்துளியாக விட்டால் நஞ்சு இறங்கும்...
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +