துரோணாசனம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

துரோணாசனம் தனுராசனத்துக்கு மாற்று ஆசனம் ஆகும். தனுராசனத்தில் குப்புறப் படுத்த வண்ணம் கால்களைத் தலைக்கு நேரே தூக்க வேண்டும். துரோணாசனம் அதற்கு நேர் மாறாகக் கால்கள் தரையில் படிந்த வண்ணம் இருக்கவேண்டும்.


செய்முறை[தொகு]

இரு கைகளையும் பின்னால் ஊன்றிய வண்ணம் தலையைக் கீழே வளைக்க வேண்டும். மல்லாந்த வண்ணம் கால்கள் ஊன்றிய நிலையிலும், கைகள் தலைக்குப் பின்புறமாகவும் இருக்க, தலை இரு கைகளுக்கும் நடுவே இருக்க வேண்டும். அந்நிலையில் அண்ணாந்து பார்க்கும் வண்ணம் இருத்தல் வேண்டும். இப்போது உடலை மட்டும் ஆட்டவும். தநுராசனத்தில் கால்களைப் பின்னால் கொண்டு போய்த் தலைக்கு மேல் தூக்கிய வண்ணம் ஆட்ட வேண்டும். இதில் கால்களும், கைகளும் ஊன்றிய நிலையில் உடலை மட்டும் ஆட்ட வேண்டும்.


பலன்கள்[தொகு]

தனுராசனத்தின் மூலம் பின்னால் வளைக்கப்பட்ட கால்கள் இப்போது முன்னால் வளைக்கப்படுவதாலும், கைகளும் பின்னால் ஊன்றுவதாலும் ரத்த ஓட்டம் சீராகும். தொடைகள் வலுப்பெறும். பாதங்களின் தசைப்பிடிப்பு சீராகும்.

"https://ta.wiktionary.org/w/index.php?title=துரோணாசனம்&oldid=1319649" இலிருந்து மீள்விக்கப்பட்டது