துவாதசநாமம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

துவாதசநாமம்:
பன்னியிரண்டு சிறப்புத் திருப்பெயர்களுக்குரிய இறைவன் திருமால்
துவாதசநாமம்:
பன்னியிரண்டு திருமண் அணிந்துள்ள ஓர் அந்தணர்-சிவப்புத் துணியோடிருப்பவர்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • துவாதசநாமம், பெயர்ச்சொல்.
  1. இறைவன் திருமாலின் சிறப்பான பன்னியிரண்டு திருப்பெயர்கள்
  2. ஸ்ரீவைஷ்ண சமயத்தினர் உடலின்மீது பன்னிரண்டு இடங்களில் தரித்துக்கொள்ளும் திருமண் (நாமம்)
  • துவாதச(द्वादश)எனில் சமசுகிருதத்தில் பன்னியிரண்டு...நாம (नाम) எனில் பெயர், துதி,தோற்றம் போன்ற அர்த்தங்கள் உண்டு...இறைவன் திருமாலுக்குரிய பன்னியிரண்டு சிறப்புப் பெயர்களான கேசவன், நாராயணன், மாதவன், கோவிந்தன், விஷ்ணு, மதுசூதநன், திரிவிக்கிரமன், வாமநன், ஸ்ரீதரன், ஹ்ருஷீகேசன், பத்மநாபன், தாமோதரன் என்பன துவாதசநாமம் என்று அழைக்கப்படுகின்றன...மேலும் ஆச்சாரமான ஸ்ரீவைணவ சமயத்தினர் பூசை செய்யும் முன்னும், விசேடமான நாட்களிலும் தங்கள் உடம்பில் பன்னியிரண்டு இடங்களில் அணிந்துக்கொள்ளும் திருமண் காப்பும் (நாமங்களும்) துவாதசநாமம் என்று குறிப்பிடப்படுகிறது...இந்த நாமங்களை இன்னின்ன திருமாலின் பெயரைசொல்லி இந்திந்த இடங்களில் அணிந்துக்கொள்ள வேண்டுமென வரைமுறையுண்டு...அந்த பன்னியிரண்டு இடங்கள் முறையே நெற்றி, நடு வயிறு(நாபி), நடு மார்பு (மார்பு), நடுக்கழுத்து (நெஞ்சு), வலது மார்பு, வலது கை, வலது தோள், இடது மார்பு, இடது கை, இடது தோள், பின்புறம் அடிமுதுகு, பின்புறம் பிடரி ஆகியவையாகும்


மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. The twelve prime names of Lord Viṣṇu, the Hindu God.
  2. The Srivaishnavite religious marks worn on the body in twelve places.



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

  • பிற ஆதாரங்கள்...[1][2]


"https://ta.wiktionary.org/w/index.php?title=துவாதசநாமம்&oldid=1276015" இலிருந்து மீள்விக்கப்பட்டது