உள்ளடக்கத்துக்குச் செல்

தூசுவுறுஞ்சுப்பொறி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
தூசுவுறுஞ்சுப்பொறி
தூசுவுறுஞ்சுப்பொறி

தமிழ்

[தொகு]
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

தூசுவுறுஞ்சுப்பொறி,

பொருள்

[தொகு]
  1. வீட்டை முழுசுத்தம் செய்யும் கருவி.

மொழிபெயர்ப்பு

[தொகு]
  • ஆங்கிலம்
  1. vacuum cleaner

விளக்கம்

[தொகு]
தூசு + உறிஞ்சும் + பொறி = தூசுவுறுஞ்சுப்பொறி...மின்சாரத்தால் இயங்கும் இவ்வகைப் பொறிகள் வீட்டில் சேரும் புழுதி, தூசி, தரையில் விழும் சிறு வீண் பொருட்கள் இன்னும் அநேக மாசுக்களை உறிஞ்சிக் கொள்ளும்...துடைப்பத்தால் நீக்கமுடியாதவைகளையும் மிகத் துல்லியமாக, சுத்தமாக உறிஞ்சி எடுத்துவிடும்...இதோடு பல உபகரணங்களும் உண்டு...அவை நம் கை செல்லமுடியாத வீட்டின் மூலை முடுக்குகளைச் சுத்தம் செய்யவும், கூரையில் சேர்ந்த ஒட்டடையை நீக்கவும், இன்னும் பலவிதமன சுத்திகரிப்பு வேலைகளுக்கு உதவும்படியாக இருக்கும்...உறிஞ்சுவது சாத்தியமில்லாத இடங்களின் தூசை ஊதியும் வெளிக்கொண்டுவரலாம்...மாசுகளின் அடர்த்திக்கேற்றவாறு பொறி இயங்கும் வேகத்தை சரிசெய்துக்கொள்ள பொத்தான்களுண்டு...பலவிதமான வடிவமைப்புகளிலும் வண்ணங்களிலும் கிடைக்குமிவை ஒரு தனிவகை நெகிழி(plastic) மற்றும் தொய்வையால் (rubber) உண்டாக்கப்படுகிறது...
"https://ta.wiktionary.org/w/index.php?title=தூசுவுறுஞ்சுப்பொறி&oldid=1224154" இலிருந்து மீள்விக்கப்பட்டது