உள்ளடக்கத்துக்குச் செல்

தென்கலை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
தென்கலைத் திருமண் (நடுவில்)

தமிழ்

[தொகு]
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

தென்கலை, .

பொருள்

[தொகு]
  1. வைணவ சமயத்தின் ஓர் உட்பிரிவு

மொழிபெயர்ப்பு

[தொகு]
  • ஆங்கிலம்
  1. a sub-sect of srivaishnavites

விளக்கம்

[தொகு]
  • தென் + கலை = தென்கலை...வைணவம் எனப்படும் திருமாலை முதற்கடவுளாக வழிபடும் சமயத்தின் ஓர் உட்பிரிவு...இந்து சமயத்தின் ஆறு முக்கிய கிளைகளின் ஒன்று திருமாலை வழிபடும் வைணவம் ஆகும்...இவர்களுக்கு திருமால் மட்டுமே பிரதானமான தெய்வம்...திருமகளையும் வழிபடுவர்...ஆழ்வார்களால் படைக்கப்பட்ட தமிழ் நாலாயிர திவ்விய பிரபந்தம் என்ற நூலை வேதங்களுக்குச் சமமாக மதித்துப் போற்றுவர்...திருமாலுக்கு அடுத்தபடியாக நம்மாழ்வாரே இவர்கள் கொண்டாடும் தெய்வம்...பண்டைய தென்நாட்டு வைணவ சம்பிரதாயங்களைப் பெரிதும் கடைபிடிப்பவர்கள்... மற்றொரு உட்பிரிவான வடகலை வைணவர்களுக்கும் இந்தத் தென்கலை வைணவர்களுக்கும் சுமார் பதினெட்டு வேறுபாடுகள் உள்ளனவாக கூறுகின்றனர்...தென்கலைப் பிரிவைச் சேர்ந்தவர்கள் என்பதற்கான திருநாமத்தை (திருமண்) நெற்றியில் இட்டுக்கொள்ளுவார்கள்...இந்தக் குறி ஆங்கில எழுத்து 'Y' போல இறுபுறமும், மூக்கின் மேல் நுனியில் சற்று இறக்கி, வெள்ளை மண்ணாலும், நடுவில் ஸ்ரீசூர்ணம் எனப்படும் சிவப்பு நிறப் பொடியால் ஒரு நேர்க்கோடு கொண்டதாயும் இருக்கும்.


  • தமிழ்ஆதாரங்கள்}...[[1]][[2]]
"https://ta.wiktionary.org/w/index.php?title=தென்கலை&oldid=1231814" இலிருந்து மீள்விக்கப்பட்டது