தேவுடு காத்தல்
Appearance
தமிழ்
[தொகு]
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
தேவுடு காத்தல், .
பொருள்
[தொகு]- பயன் இல்லாமல், வீணாக காத்திருப்பது.
- ஒரு காரியத்தை முடிக்கக் காத்திருப்பது.
மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்
- waiting in vain
- useless waiting
- waiting to finish a task.
விளக்கம்
[தொகு]- வட்டார வழக்கு...தேவுடு + காத்தல் = தேவுடு காத்தல்... தெலுங்கும் தமிழும் கலந்த சொல்...ஒரு விடயத்திற்காகவோ அல்லது ஒரு நபருக்காகவோ நீண்ட நேரம் காத்திருந்து ஒன்றும் நடவாத நிலைக்கு தேவுடு காத்தல் என்பர்...'தேவுடு' என்றால் தெலுங்கில் கடவுள் என்று பொருள்...ஒரு காரியம் நடக்க கடவுளின் அருளிற்காக எவ்வளவு காலம் காத்திருந்தாலும் அது கிட்டாமல், காரியமும் நடவாமல் போகலாம்...அப்படி பலனில்லாமல் கடவுளுக்காகக் காத்திருப்பதையே தேவுடு காத்தல் என்பர்...ஒருவருடைய வாழ்விலும் பல நேரங்களில் இத்தகைய நிகழ்வுகள் சக மனிதர்களால் ஏற்படுத்தப்படுகின்றன...அத்தகைய சந்தர்ப்பங்களைக் குறிப்பிடும்போது இந்தச்சொல்லை பயன்படுத்துவர்...
- திருப்பதிக்கு உற்சவகாலங்களில் சென்றால், திருமலையானைத் தரிசிக்க சிலசமயம் வரிசையில், பலவித அசௌகரியங்களையும் பொறுத்துக்கொண்டு பலமணி நேரம் காத்திருக்க வேண்டிவரும்...அந்த தேவுடுவை (இறைவனை) நீண்ட நேரம் காத்திருந்து தரிசிப்பதையே இந்தச்சொல் குறிப்பிடும் என்போரும் உள்ளனர்...இந்த அர்த்தத்தில் காத்திருந்தாலும் பலன் உண்டு என்பதாம்...
பயன்பாடு
[தொகு]- பண நெருக்கடியிலிருக்கும் கோபாலசாமிக்கு உதவி செய்வதாக கந்தன் சொன்னானாம்...அதனால் அவன் சொன்ன இடத்திற்கு கோபாலசாமி போய் மணிக்கணக்கில் தேவுடு காத்துவிட்டு திரும்பி வந்து விட்டான்... கந்தன் வரவில்லை...பாவம் கோபாலசாமி.
- பிரம்மோற்சவத்திற்கு திருப்பதிக்குப் போயிருந்தோம்...பதினைந்து மணி நேரம் வரிசையில் நின்று தேவுடு காத்தப் 'பிறகுதான் எங்களுக்கு தரிசனம் கிடைத்தது...