தொலைபேசி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
மொழிபெயர்ப்புகள்

தொலைக்காட்சி என்று சரியாகச் சொல்லும் நாம் தொலை பேசி என்று ஏன் பிழையாகச் சொல்லிப் பழகிவிட்டோம் என்பது தெரியவில்லை. பேசியைத் தொலைத்துவிடு என்றன்றோ பொருள்தரும். தொலைவிலிருந்தும் காணக் கூடியது தொலைக்காட்சி எனில் தொலைவிலிருந்து பேசக் கூடியது தொலைப்பேசிதானே? http://mutiru-nallatamil.blogspot.in/2011/11/1-10.html

மேலேயுள்ள வலைப்பதிவருக்கான பதில்..... வழங்குபவர்: சிவம் அமுதசிவம்.

அன்பரே! உங்கள் ஒப்பீடு சரியானதில்லை. மேலேயுள்ள ஒலிவடிவத்தையே கேட்டுப்பாருங்கள். தொலைபேசி என்றுதான் வருகிறது. எந்த மொழியிலுமே இலக்கணம் என்பது மாறக்கூடியதுதான். எடுத்துக்காட்டாகச் சொன்னால்: தொலைத்தூரம் என்றா சொல்கிறோம்? தொலைதூரம். இல்லையா? சொல்லின் இனிமை கருதியும், மக்களின் மரபுவழிப் பயன்பாடு கருதியும், ஒருசில விதிவிலக்குகள் ஏற்றுக்கொள்ளப்படத்தக்கவையே.. ஆங்கிலத்தில் Cut என்பதை ´கட்` என்று சொல்கிறோமே...

 Put என்பதை ஏன்  ´பட்` என்று சொல்வதில்லை`? ´புட்`தானே?

அதேபோலத்தான் இதுவும். கைபேசி மற்றும் தொலைபேசி என்பன சரியானவையே!

"https://ta.wiktionary.org/w/index.php?title=தொலைபேசி&oldid=1912135" இலிருந்து மீள்விக்கப்பட்டது