தோலுரித்துக் காட்டு
Appearance
தமிழ்
[தொகு]தோலுரித்துக் காட்டு வினைச்சொல் .
பொருள்
[தொகு]- ஒளிவு மறைவின்றி வெளிப்படையாகச் சொல்லுவது/செயல்படுவது
மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்
- to be transparent
விளக்கம்
[தொகு]- இது ஒரு பேச்சு வழக்கு...எந்தவொரு விடயத்திலும்/நிலைப்பாட்டிலும் ஒளிவு, மறைவு, விடுப்பு, தொடுப்பு, நீக்கல், நீட்டல், குறுக்கல்,இரகசியம் முதலான செயல்கள் இல்லாமல், உள்ளது உள்ளபடியே, நடந்தது நடந்தபடியே அனைவருக்கும் புரியும்படியாகத் தெளிவாகச் சொல்லுவதை அல்லது செய்தலை' தோலுரித்துக் காட்டு' என்பர்... இது எப்படி என்றால் ஓர் உடம்பிலிருந்துத் தோலை உரித்துவிட்டால் எப்படி உடம்புக்குள் இந்நாள்வரை தோலால் மூடப்பட்டு மறைந்திருந்த உறுப்புகள் மற்ற பகுதிகள் அனைத்தும் தெள்ளந்தெளிவாக கண்முன் வெளிப்படையாகத் தெரிகிறதோ அப்படித் தெரியவேண்டும் என்பதாகும்.
பயன்பாடு
[தொகு]- மீனாட்சிசுந்தரம் காலமானதும் ஏற்பட்ட சொத்துப் பிரச்சினையில் நடுவராகச் செயற்பட்டவர் இரமேசன். அவர் வாரிசுதாரர்களுக்கிடையே நிலவிய சந்தேகங்களையும், தவறான அபிப்பிராயங்களையும் போக்க அவர்கள் எல்லோரையும் ஓரிடத்தில் கூட்டிச் சொத்துப்பிரிவினையில் நடந்தது என்ன என்பதைத் 'தோலுரித்துக் காட்டினார். அதன் பின்னர்தான் அனைவரும் சமாதானமானார்கள்.