நடுக்காட்டூர் படுகொலை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

நடுக்காட்டூர் படுகொலை சுதந்திர போராட்ட வரலாற்றின் முதல் படுகொலை ஆகும்.1757ஆம் ஆண்டு நவம்பர் 18 அன்று முதல் விடுதலை வீரரான வீர அழகுமுத்துகோன் பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்தின் வரி வசூலிக்கும் நிலைப்பாட்டிற்கு எதிராக தொடங்கிய போராட்டத்தின் முடிவில் நடுக்காட்டூர் என்னுமிடத்தில் அவரது 6தளபதிகள் மற்றும் 248 வீரர்களுடன் பீரங்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

பெத்தநாயக்கனூர் கோட்டை போர்

கி.பி1750 முதல் 1757 வரை பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்தின் வரிவசூல் செய்யும் நடவடிக்கைகளை முதன்முதலாக எதிர்த்தவர் வீர அழகுமுத்துகோன்.இவரது தந்தை 1750ல் அனுமந்தகுடி போரில் இறந்த பிறகு தந்தையின் வேண்டுகோளுக்கு இணங்க அவரது நண்பனான எட்டையபுரம் மன்னரின் பாதுகாப்பிற்காக எட்டயபுரம் தளபதிகளாக வீரஅழகுமுத்து கோன் மற்றும் இவரது தம்பி சின்ன அழகுமுத்து கோன் நியமிக்கப்பட்டனர்.1750ல் முதன்முதலில் ஆங்கிலேயர்களுக்கு எதிரான முதல் போரை அறிவித்தார்கள் அழகுமுத்து சகோதரர்கள்.1752ல் கழுகுமலை போரில் பிரித்தானியப் படைகளை தோற்கடித்தார்கள்.1755ல் நடந்த போரில் பெருமாள் கோவிலை காக்க சின்ன அழகுமுத்து துப்பாக்கியால் சுடப்பட்டு மரணம் அடைந்தார்.1757ஆம் ஆண்டு ஆங்கிலேய அரசை எதிர்ப்பதற்காக திரட்டியிருந்த 700 படைவீரர்களில் இரண்டு பிரிவாக பிரித்து அதில் 301 வீரர்கள் கொண்ட ஒரு படையை பெத்தநாயக்கனூர் கோட்டையில் தங்க வைத்திருந்தார் வீர அழகுமுத்துகோன்.இரவு நேரம் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் வேளையில் ஆங்கிலேய படைத்தளபதி கான்சாகிப் என்ற மருதநாயகம் கோட்டையைத்தாக்கி அங்கிருந்த வீரர்களை கொன்று குவித்தார்.இதில் 52 வீரர்கள் கொல்லப்பட்டனர்.மீதி இருந்த 248 வீரர்கள் மற்றும் 6தளபதிகளை அழகுமுத்துக்கோனுடன் இரும்பு சங்கிலியால் பிணைக்கப்பட்டு நடுக்காட்டூருக்கு இழுத்துச்சென்றனர்.

"https://ta.wiktionary.org/w/index.php?title=நடுக்காட்டூர்_படுகொலை&oldid=1994402" இலிருந்து மீள்விக்கப்பட்டது