நந்தன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • நந்தன், பெயர்ச்சொல்.
  1. காண்க: நந்த கோபாலன்
    (எ. கா.) கடைக்கண்ணினுங் காட்ட நந்தன் பெற்றனன் (திவ். பெருமாள். 7, 3).
  2. இடையன்
    (எ. கா.) ஈட்டினன் பைந்தொடை நந்தர்கோன் பண்ணிகாரமே (பாகவ. 10, கோவர்த். 1).
  3. திருமால்
    (எ. கா.) நந்தனும் . . . ஏத்தும் வெங்கை விமலர் (வெங்கைக். 324)
  4. பாடலிபுரத்தைத் தலைநகராகக்கொண்டு ஆண்ட ஓர் அரசவம்சத்தினன்
    (எ. கா.) நந்தன் வெறுக்கை யெய்தினும் (அகநா. 251)
  5. தோற்காசு வழங்கியவனாகக் கருதப்படும் ஓர் அரசன்
  6. காண்க: திருவாளைப் போவார் நாயனார்
  7. புத்திரன். (இலக். அக.)
  8. பழைய நாணய வகை (சரவண. பணவிடு. 58.)
  9. வாழை வகை(உள்ளூர் பயன்பாடு).

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. .
  2. Cowherd
  3. Viṣṇu;
  4. A king of the Nanda dynasty, ruler of Pāṭaliputra
  5. A king believed to have issued leather coin
  6. A saiva saint
  7. Son
  8. An ancient coin
  9. A kind of plantain


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=நந்தன்&oldid=1809997" இலிருந்து மீள்விக்கப்பட்டது