நாஸ்தி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

நாஸ்தி, பெயர்ச்சொல்.

பொருள்[தொகு]

  1. இன்மை
  2. இல்லாது செய்துவிடுவது
  3. அழித்துவிடுவது.
  4. நிர்மூலமாக்கிவிடுவது

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. to destroy
  2. none-existence
  3. non-entity
  4. annihilation
  5. destruction

விளக்கம்[தொகு]

  • சென்னை வட்டார வழக்கு...புறமொழிச்சொல்...नास्ति...நாஸ்தி1-... ந + அஸ்தி என்னும் இரு வடமொழிச் சொற்கள் மூலம்...இல்லை என்று பொருள்..வட்டார வழக்கில் இல்லாது செய்துவிடல், அழித்து விடல், நாசம் செய்துவிடல் என்ற அர்த்தங்களில் பயன்படுத்தப்படுகிறது...

பயன்பாடு[தொகு]

  • என்னோடு சண்டை போடாதே...நாஸ்தி ஆக்கிவிடுவேன் = என்னோடு சண்டையிட்டால் அழித்துவிடுவேன்.
  • அவன் வீட்டில் எல்லாம் நாஸ்தி ஆயிடுச்சி = அவனுடைய வீட்டில் எல்லாம் நாசம் ஆகிவிட்டது.
  • ஒன்னெ நாஸ்தி பன்னாங்காட்டி என் பேரு கருப்பன் இல்லே = உன்னை ஒழித்துக்கட்டாவிட்டால், என் பெயர் கருப்பன் இல்லை.


"https://ta.wiktionary.org/w/index.php?title=நாஸ்தி&oldid=1881079" இலிருந்து மீள்விக்கப்பட்டது