நீலகண்டன்
தமிழ்[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்[தொகு]
- நீலகண்டன், பெயர்ச்சொல்.
நமது கண்களுக்கு உடலின் தன்மையை காட்டும் தன்மை உண்டு அதாவது கோபமாகவோ அல்லது பித்தம் அதிகமாகவோ இருந்தால் செவ்வண்ணமாக இருக்கும். உடல்உபாதைகள் இருந்தால் மஞ்சள் வண்ணமாக இருக்கும்.அதைப்போன்று அதீத அன்பும் காதலும் உருவாகும் போது கண்கள் நீலவண்ணமாக மாறும் அதனால்தான் ராதையின் மீது அதீத காதல் கொண்டவனை நீலவண்ண கண்ணன் என்கிறோம் நீலகண்டன் என்பது சிவனடியார்கள் சிவபெருமானை அதீத காதலோடும் பக்தியோடும் துதிக்கும் போது அவர்கள் கண்கள் நீல வண்ணமாக மாறுவதை காண்பவன் என்பதாகும்
பாடல் வரிகளில் கூட கவிஞர்கள் காதல் கசிந்துருகுவதை இப்படி குறிப்பிட்டிருக்கிறார்கள்... செந்தமிழ் தேன்மொழியாள்... என்ற பாடலில் கண்களில் நீலம் உடையவளோ அதை கடலினில் சென்று கரைத்தவளோ... எனவும் நீலவான ஓடையில் நீந்துகின்ற வெண்ணிலா... நான் வரைந்த பாடல்கள் நீலம் பூத்த கண்ணிலா... எனப் பாடியிருக்கிறார்கள்...
மொழிபெயர்ப்பு[தொகு]
- ஆங்கிலம்
- lord shiva, a hindu god, as having azure-coloured neck.
விளக்கம்[தொகு]
- தேவர்களும் அசுரர்களும் அமுதத்திற்காக பாற்கடலைக் கடைந்தபோது முதலில் வெளிப்பட்டது மிகக்கொடிய நஞ்சாகும்..இந்த நஞ்சின் பெரும் நாசம் விளைவிக்கக்கூடிய சக்தியை உணர்ந்து அனைவரும் மிகவும் அச்சமடைந்தபோது, சிவபெருமான் அப்படி வெளிப்பட்ட நஞ்சை உடனே விழுங்கிவிட்டார்...அப்போது எங்கே அந்தக் கொடிய நஞ்சு சிவபிரானின் வயிற்றில் இருக்கும் பிரபஞ்சத்தை அழித்துவிடுமோ என்று பயந்த அவருடைய பத்தினி பார்வதி தேவி சிவபெருமானின் தொண்டையை, விடம் கீழே வயிற்றில் இறங்காமல், மிகவும் அழுத்தி இறுக்கிப்பிடித்துக்கொண்டார்...சிவபெருமானின் தொண்டைவரை இறங்கிய விடம், மேலும் சிவபெருமானின் வயிற்றில் இறங்காமல் பார்வதி தேவி தடுத்துவிட்டதால், அந்த நஞ்சு சிவபெருமானின் வாயிலிருந்து வெளிப்படாமலிருக்க நாரதமுனிவரும் சிவபிரானின் வாயை இறுக்கி மூடிவிட்டார்...ஆக அந்த ஆலாகல (ஹாலாஹல) விடம் சிவபெருமானின் தொண்டையிலேயே தங்கிவிட்டது...தன் மிகக்கொடிய நச்சுத்தன்மையால் சிவபெருமானின் தொண்டையை/கழுத்தையும் நீல நிறமாக மாற்றிவிட்டது...இப்படி நஞ்சால் நீல நிறமான தொண்டையை/கழுத்தை உடையவராதலால் சிவபெருமான் 'நீலகண்டன்' என்று அழைக்கப்படுகிறார்...வடமொழியில்...'க1-ண்ட்1-'(नीलकण्ठ) என்றால் தொண்டை/கழுத்து என்பது பொருளாகும்.
( மொழிகள் ) |
சான்றுகள் ---நீலகண்டன்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி