நெற்றிக்கண்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
நெற்றிக்கண்
நெற்றிக்கண் பரமசிவன் தன் பத்தினி பார்வதியுடன்
நெற்றிக்கண் மூடிய, யோக நிலையில் பரமசிவன்

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

பொருள்[தொகு]

நெற்றிக்கண், பெயர்ச்சொல்.

  1. சிவபெருமானுக்கு நெற்றியில் அமைந்த கண்.


மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. the third eye on the forehead of lord shiva, a hindu god for destruction.


விளக்கம்[தொகு]

இந்து சமயத்தில் அழித்தல் தொழிலுக்கு உரியவரான இறைவன் சிவபெருமானுக்கு நெற்றியின் நடுவே செங்குத்தாக ஒரு கண் உண்டு...எப்போதும் மூடியே இருக்கும் இந்தக் கண்ணை, பெருமான் கடும் கோபத்திற்கு உள்ளாகும்போது திறப்பார்...இந்த நெற்றியிலிருக்கும் மூன்றாவது கண்ணை நெற்றிக்கண் என்பர்...இந்தக் கண் ஞானத்தின் அடையாளமாகவும், அக்னியின் வடிவமாகவும் கூறப்படுகிறது... சிவன் மிகுந்த கோபமடையும் வேளையில் இந்தக் கண்ணைத் திறந்தால், தீப்பிழம்புகள் வெளிவருமென்பது சைவர்களின் நம்பிக்கை...தியானம் செய்துக் கொண்டிருந்த சிவபெருமான் மீது காதல் தெய்வம் மன்மதன் அம்பெய்தி அவரை காமத்தில் ஆழ்த்த முயன்றபோது, சிவன் கோபம் கொண்டு தன்நெற்றிக் கண்ணைத் திறந்து மன்மதனை அழித்ததாக புராணங்கள் கூறுகின்றன.


( மொழிகள் )

ஆதாரங்கள் ---நெற்றிக்கண்--- DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி +தமிழ் தமிழ் அகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=நெற்றிக்கண்&oldid=1216305" இருந்து மீள்விக்கப்பட்டது