பஞ்சந்தாங்கி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பஞ்சந்தாங்கி-கேழ்வரகு என்னும் தானியம்
பஞ்சந்தாங்கி-கேழ்வரகின் கூழ்
பஞ்சம்
பஞ்சத்தால் மாண்டோர்

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

பஞ்சந்தாங்கி, பெயர்ச்சொல்

பொருள்
  1. பஞ்சகாலத்தில் ஆதரிப்பது
  2. கேழ்வரகு
  3. கேப்பை

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. a means of support in times of famine
  2. finger millet
  • இந்தி
  1. रागी
  • தெலுங்கு
  1. రాగి

விளக்கம்[தொகு]

  • பஞ்சம் + தாங்கி = பஞ்சந்தாங்கி...பஞ்சக்காலத்தில் மக்களுக்கு கேழ்வரகில் கூழ் காய்ச்சி வழங்குவார்கள்...மற்ற எந்த தானியங்களைவிடவும் கேழ்வரகு பஞ்சக்காலத்தில் பயன்படுத்தப்பட மிகச் சிறந்த தானியமாகும்...காரணம் கேழ்வரகிற்கு நீண்ட நேரம் பசி எடுக்காமல் வைத்திருக்கும் திறன் உண்டு...பஞ்சத்தை நல்ல முறையில் சமாளித்து மக்களைத் தாங்குவதால் பஞ்சந்தாங்கி என்ற பெயரைப் பெற்றது இந்த தானியம்...
  • பஞ்சக்காலத்தில் மக்களுக்கு ஆதரவாக இருக்கும் எந்தவொரு விடயத்தையுமே பஞ்சந்தாங்கி என்றழைப்பது வழக்கம்...பஞ்சக்காலத்திலும் தண்ணீரைக் கொடுத்துவந்த தமிழக சேலம் நகர்ப்பகுதியிலுள்ள ஓர் ஏரிக்கு பஞ்சந்தாங்கி ஏரி என்றே பெயர்...

  • ஆதாரங்கள்....[1]

"https://ta.wiktionary.org/w/index.php?title=பஞ்சந்தாங்கி&oldid=1227175" இலிருந்து மீள்விக்கப்பட்டது