பதினாறு செல்வங்கள்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
பொருள்.
 1. கல்வி
 2. புகழ்
 3. வலிமை
 4. வெற்றி
 5. நன் மக்கள்
 6. பொன்
 7. நெல்
 8. நல் விதி
 9. நுகர்ச்சி
 10. அறிவு
 11. அழகு
 12. பெருமை
 13. இளமை
 14. துணிவு
 15. நோயின்மை
 16. வாழ்நாள்
விளக்கம்.
 • 'பதினாறும் பெற்று, பெருவாழ்வு வாழ்க' என்று வாழ்த்துவது தமிழர் மரபு.
 • குறிப்பாக, திருமணத்தின் போது மணமக்களை, பெரியவர்கள் இங்ஙனம் வாழ்த்துவர்.

மேலும் அபிராமி அந்தாதி பதிகப் பாடலொன்று இந்தப் பதினாறு செல்வங்கள் என்னென்ன என்பதை அழகாகக் கூறுகின்றது இப்படி:-

அகிலமதில் நோயின்மை கல்விதன தானியம் அழகுபுகழ் பெருமை இளமை அறிவுசந் தானம்வலி துணிவுவாழ் நாள்வெற்றி ஆகுநல் லூழ்நுகர்ச்சி தொகைதரும் பதினாறு பேறும்தந் தருளிநீ சுகானந்த வாழ்வளிப்பாய் -(அபிராமி அந்தாதி பதிகம்)

1.உடலில் நோயின்மை, 2.நல்ல கல்வி, 3.தீதற்ற செல்வம், 4.நிறைந்த தானியம், 5.ஒப்பற்ற அழகு, 6.அழியாப் புகழ், 7.சிறந்த பெருமை, 8.சீரான இளமை, 9.நுண்ணிய அறிவு, 10.குழந்தைச் செல்வம், 11.நல்ல வலிமை, 12.மனத்தில் துணிவு, 13.நீண்ட வாழ்நாள்(ஆயுள்), 14.எடுத்தக் காரியத்தில் வெற்றி, 15.நல்ல ஊழ்(விதி), 16.இன்ப நுகர்ச்சி

ஆதாரம்
 • கழக இணைச்சொல்லகராதி,
 • புதுவை தமிழ் திறனாய்வு,பாவாணர் ஆராயச்சி நூலகம், மதுரை, தமிழகம், இந்தியா.
மொழிபெயர்ப்புகள்
 • ஆங்கிலம் -
"https://ta.wiktionary.org/w/index.php?title=பதினாறு_செல்வங்கள்&oldid=1912099" இருந்து மீள்விக்கப்பட்டது