பத்தரைமாற்றுத் தங்கம்.

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பத்தரைமாற்றுத் தங்கத்தில் செய்யப்பட்ட பொருள்

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

பத்தரைமாற்றுத் தங்கம்., பெயர்ச்சொல்.

பொருள்[தொகு]

  1. ஆபரணத்தங்கம்.
  2. ஒருவரைப் புகழும் சொல்.

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. ornamental gold
  2. used to praise a well- mannered and helpful person.

விளக்கம்[தொகு]

  1. பத்து + அரை + மாற்று + தங்கம் + பத்தரைமாற்றுத் தங்கம்... தூய தங்கத்தில் நகைகள் செய்ய முடியாது...அதோடு வேறு உலோகத்தைக் குறிப்பிட்ட அளவு கலந்தால்தான் ஆபரணங்களாகச் செய்ய முடியும்...அவ்வகையில் பத்து பங்கு தங்கத்திற்கு அரை பங்கு என்ற விகிதத்தில் மற்ற உலோகங்கள் (செப்பு, வெள்ளி போன்றவை) கலந்து மாற்றப்பட்டத் தங்கத்தில்தான் ஆபரணங்கள் செய்யப்பட்டு, பயன்பாட்டில் இருந்தது... இதுவே பத்தரைமாற்றுத் தங்கம் என அழைக்கப்பட்டது...இந்த விகிதத்தில் தயாரிக்கப்பட்டத் தங்கம் தற்காலத்திய 22 கேரட் தங்கத்திற்கு சற்றேறக்குறைய நிகரானது...
  2. மிக நல்ல நடத்தையோடு எல்லாருக்கும் உதவியாக இருப்பவரை பத்தரைமாற்றுத் தங்கம்என்று புகழ்வது சமூகத்தில் வழக்கம்...

பயன்பாடு[தொகு]

  1. நகை நட்டு எல்லாம் பத்தரைமாற்றுத் தங்கத்தில் செய்யப்பட்டவைதான்...சுத்தமான தங்கத்தில் நகைகள் செய்ய முடியாது...
  2. இராகவேந்திரன் எல்லாருக்கும், எந்தவிதமான பலனும் எதிர்பாராமல், எந்த நேரத்திலும் கூப்பிட்டக் குரலுக்கு ஏன் என்று ஓடி வருவான்...அவனொரு பத்தரைமாற்றுத் தங்கம்...
"https://ta.wiktionary.org/w/index.php?title=பத்தரைமாற்றுத்_தங்கம்.&oldid=1227424" இலிருந்து மீள்விக்கப்பட்டது