பனிக்கலைமான்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பனிக்கலைமான்
பனிக்கலைமான்
வேட்டையாடப்பட்டு இழுத்துச் செல்லப்படும் பனிக்கலைமான்

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

பனிக்கலைமான், பெயர்ச்சொல்

பொருள்[தொகு]

  1. துருவ பிரதேசத்தில் வாழும் மான் இனம்.

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. reindeer

விளக்கம்[தொகு]

  • ஆசியா, ஐரோப்பா, வட அமெரிக்கா கண்டங்களில் வடகோடி துருவப் பகுதிகளில் வாழும் மான் இனம்... இவற்றில் பல வகைகள் உள்ளன...அவை உருவ அளவிலும் நிறத்திலும் ஒன்றுக்கொன்று வேறுபடும்...சுமார் ஏழு வகைகளைக் கொண்ட இந்த உயிரினத்தில் சிலவகை முற்றிலும் அழிந்தேவிட்டன... இன்னும் சிலவகை அழியும் தறுவாயிலுள்ளன... இந்த பகுதியில் வாழும் மக்களுக்கு இவை பெரும் உபயோகமாக உள்ளதால் அதிக அளவில் வேட்டையாடப்பட்டன... இவற்றின் இறைச்சி, பால், தோல், கொம்புகள் உபயோகப்படுத்தப்படுகின்றன...மக்களின் போக்குவரத்துக்கு ஒருவகை சக்கரங்களில்லாத பனிச்சறுக்கு வண்டியை குதிரைகளைப்போல் இழுத்துச் செல்லும்...அந்த வண்டிக்கு வேகத்திற்காக பல பனிக்கலைமான்களைப் பூட்டுவர்...ஆடு, மாடுகளைப்போல் வீடுகளில் பழக்கப்படுத்தப்படுகின்றன... கிறிஸ்துமஸ் விழாவின் முதல் நாள் இரவு சிறுவர் சிறுமியருக்கு அன்பளிப்புகளைத் தர கிறிஸ்துமஸ் தாத்தா பல பறக்கும் பனிக்கலைமான்கள் பூட்டிய சறுக்கு வண்டியில் வருவார் என்னும் கதையால் இந்த உயிரினங்கள் உலகம் முழுவதும் அறியப்பட்டது!!!
"https://ta.wiktionary.org/w/index.php?title=பனிக்கலைமான்&oldid=1912132" இலிருந்து மீள்விக்கப்பட்டது