பயனர்:தென்காசி சுப்பிரமணியன்/மணல்தொட்டி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
உவான் ஓ இளவரசி வந்ததாக கருதப்படும் பாதை

இவரின் இன அடையாளம் பற்றி பல்வேறு கருத்துகள் இருந்தாலும் இவர் உண்மையாக வாழ்ந்ததற்கான வரலாற்று சான்றுகளே இல்லை என மறுக்கும் தரப்பும் உள்ளது. இந்த இளவரசி பற்றி முதலில் எழுதப்பட்ட சம்யுக் யுசா நூல் ஆசிரியர் கிம் சுரோவின் தென்கொரிய அரசாங்கத்தை புனிதப்படுத்துவதற்காக அவர் மணந்தது புத்தர் பிறந்த அயோத்தியா நாட்டின் இளவரசி என கூறினார் என்கின்றனர். [1] இந்தியாவில் இருந்து கொரியா வரை பயணம் செய்யுமளசு தொழில்நுட்பங்கள் வளராத காலத்தில் இந்த பயணத்தின் சாத்தியக்கூறுகளும் கேள்விக்கு உட்படுத்தப்படுகிறது.[1]

அக்கால கொரிய இலக்கிய மரபுப்படி இந்தியாவில் இருந்து வந்தவை எல்லாம் புனிதத்தன்மையோடு அடையாளப்படுத்தும் வழக்கம் இருந்ததையும் சுட்டிக்காட்டுகின்றனர்.[2] மேலும் இந்தியாவில் இருந்து கொரியா வந்ததற்கான கொரிய சீன இலக்கியங்களில் கிடைத்த அளவு இந்திய இலக்கியங்களில் கிடைக்கவில்லை என்பதையும் மறுப்பதற்கான காரணமாய் முன் வைக்கின்றனர்.[1][2]

சம்யுக் யுசா நூல் எழுதப்பட்ட அதே காலத்தில் கரக்குக்கி நூலும் எழுதப்பட்டது. அதில் இந்த கிம் சுரோ அரசரின் அரசாங்க தோற்றுவாய் பற்றி மாறுபட்ட கூற்றுகள் உள்ளன.[3] [3] சம்யுக் யுசா, கரக்குக்கி போன்ற நூல்கள் இரண்டாம் நிலை நூல்கள் என்பதாலும் ஒவ்வொரு நூலிலும் இந்த அரசாங்க தோற்றுவாய் பற்றி மாறுபட்ட கருத்துகள் இருப்பதும் இந்த இளவரசியின் வரலாற்றுத்தன்மையை கேள்விக்கு உள்ளாக்குகின்றன.[4] இதே நூல்களில் அரசர் கிம் 157 ஆண்டுகள் வாழ்ந்ததாகவும் எதிரிகளிடம் இருந்து மக்களை காப்பாற்ற கழுகாகவும் பருந்தாகவும் மாறினார் போன்ற கதைகளை கொண்டுள்ளதால் இவற்றை வரலாற்று சான்றாக கொள்ள மறுக்கின்றனர்.[4] ஆனால் கொரியாவில் அதிக ஆண்டுகள் வாழ்ந்த அரசரின் வயது 97 மட்டுமே ஆகும்.[5][6] இது போன்ற புனிதப்படுத்தல் காரணமாகவே அரசர் கிம் சுரோ மற்றும் உவாங்கு ஓவின் வரலாற்றுத்தன்மை கேள்விக்கு உட்படுத்தப்படுகின்றன.

இவரின் தோற்றுவாய் குறித்து மாறுபட்ட கருத்துக்கள் இருந்தாலும் இவரின் இந்திய அடையாளம் இந்திய கொரிய அரசியல் நல்லுறவை வளர்க்க நல்வாய்ப்பாக பயன்படுவதை ஏற்கின்றனர்.[7]

  1. 1.0 1.1 1.2 "'허왕후 설화'는 어떻게 실제 역사로 둔갑했나" (ko) (2018-09-10).
  2. 2.0 2.1 수정: 2019.12.19 09:23, 입력: 2019 12 17 06:00 (2019-12-17). "[이기환의 흔적의 역사 "한반도엔 없는 돌"…가락국 허황후 '파사석탑의 정체']" (ko).
  3. 3.0 3.1 வார்ப்புரு:Cite news
  4. 4.0 4.1 임동근 (2017-08-11). "[연합이매진 인도 공주 허황옥이 가야에 온 까닭은]" (ko).
  5. வார்ப்புரு:Cite journal
  6. "Queen Heo Hwang-ok" (Korean).
  7. "[김성회의 재미있는 다문화이야기 이주민 '허황옥'과 '처용설화'는 사실일까?]" (ko) (2019-05-05).