பற்ற வைத்தல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

பற்ற வைத்தல்

சொல் பொருள் விளக்கம்

அடுப்பைப் பற்ற வைத்தல் பழமையது. சுருட்டு, வெண்சுருட்டு, இலைச்சுருள் (பீடி) முதலியவற்றைப் பற்றவைப்பது புது நாகரிகப்பாடு. தொழில் துறையில் பற்றவைப்பது நாடறிந்த செய்தி. ஒன்றை ஒன்றில் பற்றுமாறு வைப்பதே பற்றவைப்பு. பற்றவைத்தது என்பது தெரியா வண்ணம் செய்ய வல்ல தேர்ச்சி மிக்கவர்களும் உளர். பற்றவைக்கும் அதனைப்போல ஒருவரைப் பற்றிய செய்தியை மற்றொருவரிடம் சென்று பற்றவைப்பாரும் உளர். அவர் தம் செயலும் பற்றவைத்தல் எனவே வழங்கும். “பற்றவைத்தது என்பது தெரிந்துகொள்ள முடியாமலே பற்ற வைப்பதில் தேர்ந்த ஆள்” எனப் பாராட்டுப் பெற விரும்புவாரும் உளர். ஆனால் அவருக்கும் தேர்ந்த ஒருவர் அவரைப் பற்ற வைக்கும்போது தான் அவர் செய்த செயற்கொடுமை உணர்வாரோ என்னவோ?

"https://ta.wiktionary.org/w/index.php?title=பற்ற_வைத்தல்&oldid=1913006" இலிருந்து மீள்விக்கப்பட்டது