பாக்குமரம்
Appearance
தமிழ்
[தொகு]
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பாக்குமரம், .
பொருள்
[தொகு]- Areca Catechu (தாவரவியல் பெயர்)
- கமுகுமரம்
- கிரமுகம்வடமொழி
மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்
- areca nut tree
விளக்கம்
[தொகு]- பாக்கு மரங்களின் பூர்வீகம் மலேசியா அல்லது பிலிஃபைன் என்று கருதப்படுகிறது...உலகில் பசிஃபிக் மண்டல உஷ்ணப் பகுதிகள், ஆசியா, கிழக்கு ஆஃப்ரிகா முதலான இடங்களில் பயிராக்கப்படுகிறது...இந்தியாவில் பரவலாக இருந்தாலும் பெரும் பகுதி கேரள, கர்நாடக, அசாம் மாநிலங்களிலிருந்தே கிடைக்கிறது...
மருத்துவப் பயன்கள்
[தொகு]- பாக்கு மரத்தின் வேரால் பல்லசைவும், வாய்ரணமும் அதன் இளம்குருத்தால் இடுப்புவலியும் நீங்கும்...
- குருத்து இலையை இடித்துச் சாறெடுத்து சமன் நல்லெண்ணெய் கூட்டிக் கொதிக்கவைத்துத் தாளக்கூடியச் சூட்டில் இடுப்பில் தளர பூசிவைக்க வலி நீங்கும்.
- இதன் வேரைப் பஞ்சுபோல் இடித்து ஒரு குடுவையில் எட்டு மடங்கு நீர்விட்டு நான்கிலொன்றாகக் காய்ச்சி வடிகட்டி, அடிக்கடி வாயிலிட்டுக் கொப்புளித்துவர வாய்ரணமும், பல்லசைவும் போகும்...
- இதன் கியாழத்தை ஆறாத கட்டுப் புண்களுக்கு விட்டு அலம்பிவர விரைவில் ஆறும்...
- இந்த மரத்தின் கொட்டையிலிருந்து உற்பத்தி செய்யப்படும் பாக்கு, பாக்குப்பொடி மற்றும் சீவல் போன்றவை வெற்றிலை, சுண்ணாம்போடு சேர்த்து தாம்பூலம் தரிக்க பயனாகிறது...
( மொழிகள் ) |
சான்றுகள் ---பாக்குமரம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி