பாட்டிவைத்தியம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

பாட்டிவைத்தியம், பெயர்ச்சொல்.

பொருள்[தொகு]

  1. பரம்பரை வீட்டு வைத்தியம்.

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. Grand mother Therapy
  2. traditional homely medical treatment.

விளக்கம்[தொகு]

  • பாட்டி வைத்தியம் என்பது ஒரு இயற்கை மற்றும் பாரம்பரிய மருத்துவ முறையாகும். இந்த நவீன காலத்தில் கூட மக்கள் இந்த முறையை கடைபிடித்து தங்களுடைய வியாதிகளை குணப்படுத்தி கொள்கிறார்கள். இது முற்றிலும் உணவே மருந்து என்ற அடிப்படை தத்துவத்தை பொறுத்து செயல்படுத்தப்படுகிறது. இதற்கு கை மருத்துவம் மற்றும் நாட்டு மருத்துவம் என்ற மற்ற பெயர்களும் வழக்கத்தில் உண்டு.
  • வீட்டில் ஒருவர் நோயுற்றால் தலைமுறை தலைமுறையாகப் பாட்டி ,பாட்டிக்குப் பாட்டி என்ற அனுபவ வழியிலான மருத்துவ அறிவைக்கொண்டு இன்ன நோய், இன்ன மருந்து என்று வீட்டின் பெரியோர்களால் நிர்ணயிக்கப்பட்டு அதற்கேற்றபடி நோயுற்றவருக்கு மருந்துக் கொடுத்து வைத்தியம் பார்ப்பதே 'பாட்டி வைத்தியமாகும்'

பயன்பாடு[தொகு]

  • அட, இது சாதாரண பீனிசம் தான்... 'பாட்டி வைத்தியம்' போதும்... ஆங்கில மருத்துவரிடம் போய் பணத்தை நூறு, நூறாக செலவழிக்க வேண்டாம்... அந்த பரீட்சை, இந்த பரீட்சை என்றுக் கறந்து விடுவார்கள்!...


மேற்கோள்கள்[தொகு]

https://paativaithiyam.in/blogs/patti-vaithiyam-tamil-tips/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-patti-vaithiyam-in-tamil

"https://ta.wiktionary.org/w/index.php?title=பாட்டிவைத்தியம்&oldid=1972980" இலிருந்து மீள்விக்கப்பட்டது