பாணி
Appearance
NP lovers
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- பாணி, பெயர்ச்சொல்.
- ரீதி.
- காலம்.
- எஞ்சொல்லற் பாணி நின்றன னாக (குறிஞ்சிப். 152)
- தாமதம்.
- பணிப்பதே பாணியென்றான் (சீவக. 1929)
- நீண்டகாலம். (திவா.)
- இசைப்பாட்டு. (திவா.)
- புறத்தொரு பாணி யிற் பூங்கொடி மயங்கி (சிலப். 8, 44)
- சங்கீதம்.
- பாணியாழ் (சீவக. 1500)
- ஒலி.
- கிணைநிலைப் பொருநர் வைகறைப் பாணி யும் (சிலப். 13, 148)
- இசையுறுப்பாகிய தாளம்.
- தண்ணுமைப் பாணி தளரா தெழூஉக (கலித். 102)
- அழகு. காமம் ; அன்பு
- ஒரு வகை முல்லைப் பண்
- கை.
- பரசு பாணியர் (தேவா. 47, 1)
- பக்கம்.
- இளவனின்ற பாணியின் விளங்காமுன் (கம்பரா. இராவணன்வதை. 10)
- சொல்
- நீர்.
- விண்ணியல் பாணியன் (பதினொ. பொன் வண். 30)
- சருக்கரைக்குழம்பு
- கள்
- பழரசம்
- இலைச்சாறு
- மிளகும் பனைவெல்லமும் சேர்ந்த ஒருவகை மருந்து
- சரகாண்டகபாஷாணம்
- ஊர்
- நாடு
- ஊர்சூழ் சோலை
- காடு. (சூடா.)
- பூம்பந்தர்.
- பல பண்டம். (பிங்.)
- கடைத்தெரு. (யாழ். அக.)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- ஆங்கில உச்சரிப்பு - pāṇi
- (bānī) Style, manner, peculiarity
- Time, occasion
- Delay
- Long period of time
- pāṇi
- Song, melody
- Music
- Sound
- (Mus.) Measure of time
- Beauty; Love
- (Mus.) A secondary melody-type of the mullai
- Hand, arm
- Side
- Word, declaration, speech
- Water
- Molasses, treacle
- Toddy
- Sweet juice of fruits
- Juice of leaves
- Medicinal preparation of pepper and jaggery;
- A kind of mineral poison
- Town, village
- District, country
- Grove encircling a village
- Jungle
- Arbour
- Stores, provisions
- Bazaar
விளக்கம்
- பண் = பாணி (pāṇi) , பாணி (bānī) என வெவ்வேறு உச்சரிப்புகளில் வெவ்வேறு பொருள் படுகிறது
பயன்பாடு
- ...
- (இலக்கியப் பயன்பாடு)
- ...
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +