பார்த்தல்
Appearance
கடத்தல்
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- பார்த்தல், பெயர்ச்சொல்.
- ஒரு பொருளைப் பார்ப்பதற்காக வழங்கப்படும் சொல்
வகை
[தொகு]- தொழிற்பெயர்
பகுபத உறுப்பிலக்கணம்
[தொகு]- பார் + த் + த் + அல்
சான்று
[தொகு]- அவனைப் பார்த்தல் வேண்டும்
- அவன் நரியைப் பார்த்தல் வேண்டும்
வேர்ச்சொல்
[தொகு]- பார்
வினை வகை
[தொகு]- தெரிநிலை
எச்சம்
[தொகு]- பெயரெச்சம் - பார்த்த
- வினையெச்சம் - பார்த்து
முற்று
[தொகு]- பார்த்தான், பார்த்தாள், பார்த்தார், பார்த்தது, பார்த்தன போல்வன
இலக்கியம்
[தொகு]- கண்ணால் நோக்குதல்.
- பாராக்குறழா (கலித். 65)
- ஆராய்தல். படுபயனும் பார்த்துச் செயல் (குறள். 676)
- அறிதல். காலம்பார்த்துள்வேர்ப்ப ரொள்ளியவர் (குறள். 487)
- எதிர்பார்த்தல். வருவிருந்து பார்த்திருப்பான் (குறள். 86)
- விரும்புதல். புதுமை பார்ப்பார் (கம்பரா. பூக்கொய். 9)
- தேடுதல். ஆட்பார்த் துழலு மருளில் கூற்று (நாலடி, 20)
- வணங்குதல் (சூடாமணி நிகண்டு)
- மதித்தல். அவன் வயிரம் பார்ப்பதில் கெட்டிக்காரன். (பேச்சு வழக்கு)
- கவனித்தல்.
- மேற்பார்த்தல். பண்ணை பார்க்கிறான்.
- பார்வையிடுதல். இந்தப் பத்திரத்தைப் பாருங்கள்.
- மருந்து முதலியன கொடுத்தல். யார் வைத்தியம் பார்த்துக் கொண்டிருக்கிறார்.
- மந்திரித்தல். இந்த விஷக்கடிக்கு மாந்திரிகன் பார்க்கவேணும்.
- கருதுதல்.
- கடைக்கணித்தல். பார்ததொருகா லென்கவலை தீராயோ (தாயு. பராபர. 663)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- To see, look at, view, notice, observce
- . To examine, inspect, search into, scrutinise
- To know;*** 4. To look for, expect
- To desire, long for
- To search for, seek
- To worship
- To estimate, value
- To heed, pay attention to
- To look after, take care of, manage, superintend
- To peruse, look through, revise
- To treat, administer medicine
- To charm away by incantations exorcise
- To intend, design, attempt, purpose, aim at
- To look at with compassion
பிற மொழிகளில்
[தொகு]ஒளிப்படம்
[தொகு]காணொலிப் படம்
[தொகு]( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +